கங்குவா : முதல் விமர்சனத்தை பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, தெறிக்க விடும் பதிவு..!

கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் மதன் கார்க்கி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது.

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் ஆள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

kanguva movie first review update

அந்த வகையில் தற்போது இந்த படத்திற்கான முதல் விமர்சனத்தை பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். அதில் கங்குவாவின் முழு பதிப்பையும் பார்த்தேன். இன்று ஒவ்வொரு காட்சியையும் டப்பிங் செய்யும் போது 100 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு பார்வைக்கும் படத்தின் தாக்கம் அதிகரிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு சூர்யா ரெட் கலர் ஹார்ட்டை பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த முதல் விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

first reviewkanguva moviekanguva movie first review updateupdateகங்குவாசிறுத்தை சிவாமதன் கார்க்கி