அரசியலில் விஜய்க்கு போட்டியாக சிம்பு?: ‘வைரலாகும்’ கமல் பேச்சு..

எஸ்எஸ்ஆர் முதல் விஜய்வரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். இச்சூழலில், வைரலாகும் கமல் தெரிவித்த கருத்துகள் காண்போம்..

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன்- சிம்பு முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது என்பது தெரிந்ததே. அவ்வகையில் நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் பேசுகையில்,

‘தம்பி எஸ்டிஆர் போகப்போகும் தூரம் எனக்கு தெரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்த ரசிகர் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த பொறுப்போடு இனிமேல் நீங்கள் நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

- Advertisement -

ஏற்கனவே பொறுப்போடு தான் இருக்கிறீர்கள். அந்த பொறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. அது சுமையல்ல, சுகம். அந்த சுகத்தை அனுபவியுங்கள். அதைப்பார்த்து நானும் அனுபவிப்பேன்’ என்றார். கமலின் இந்த கருத்தில் அவர் சிம்புவை அரசியல் நோக்கத்தில் பேசியிருக்கலாம் என இணையவாசிகளால் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, தமிழக அரசியலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறது என்கிற விமர்சனமும் உள்ளது. தற்போது, விஜய்யின் தவெக கட்சி டிரெண்டிங்கில் உள்ளது. அவ்வகையில், அவருக்கு போட்டியாக சிம்புவை அரசியலில் இறக்கிவிட கமல் சூசகமாய் தெரிவிக்கிறார் எனவும் கணிக்கப்படுகிறது.

ஆனால், சிம்பு தன்னுடைய அரசியல் ஆசையை இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிம்புவின் தந்தை அரசியல் கட்சி தொடங்கி பிரச்சாரமும் செய்து, பின்னர் விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.

kamalhaasan mention simbu as politics
Kamal HaasanpoliticsSimbuகமல்ஹாசன்தக் லைஃப்