நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’, மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கைதி 2’ என மெகா ப்ராஜெக்ட்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிளாக்buster கூட்டணி மீண்டும்: தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படங்களில் கவனம் செலுத்தி வரும் கார்த்தி, மீண்டும் ஒரு குடும்பப் பின்னணி கொண்ட படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். அதன்படி, அவருக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜுடன் கார்த்தி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யாவின் தயாரிப்பு: இப்படத்தை நடிகர் சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ (2D Entertainment) நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட கதை விவாதப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிராமத்து மண்வாசனை மாறாத கதையம்சத்தில் இந்தப் படம் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஏற்கனவே பாண்டிராஜ் – கார்த்தி கூட்டணியில் வெளியான படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனால், மீண்டும் இந்தக் கூட்டணி இணைவது கார்த்தியின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.