தன்னை முழு அரசியல்வாதியாய் இன்று பிரகடனப்படுத்தியிருக்கிறார் தளபதி விஜய். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்..
விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் த.வெ.க கட்சியின் மாநில மாநாடு தொடங்கி இருக்கிறது. வெள்ளை நிற சட்டை அணிந்து, தனக்கே உரித்தான வேகத்தில் மேடையில் துள்ளி குதித்து ஓடி வந்த தளபதி விஜய், சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
அப்போது, கட்சி கொடியின் நிறத்தில் தொண்டர்கள் வைத்திருந்த துண்டுகளை அவர் மீது வீச, அதை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோளில் போட்டுகொண்டு ஜோராக வீரநடை போட்டுள்ளார் தளபதி விஜய், அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அளித்த ராணுவ மரியாதையை ஏற்றுக்கொன்று தொடர்ந்து மிடுக்கான நடைபோட்டர் தளபதி விஜய். இந்நிலையில், தளபதி விஜய்க்கு, திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி
உங்கள் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. நீங்க சினிமாவில் எந்த அளவுக்கு முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருந்தீர்களோ அதை அரசியலிலும் கொண்டுவாருங்கள். உங்களின் இந்த புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
மோகன் ராஜா
ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குனருமான மோகன் ராஜா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேலாயுதம் படம் ரிலீஸ் ஆகிஅ 13 ஆண்டுகள் ஆகும் இந்த நாளில் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தவெக மாநாடு மூலம் அவர் போடும் அடித்தளம் காலம் காலமாக தொடரட்டும் என வாழ்த்தி உள்ளார்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்தியன் போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டு ஹார்டின் எமோஜியையும் பறக்கவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.கே.
கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், விஜய் சாருக்கு வாழ்த்துக்கள், உங்களின் புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு விஜய் தவெக கொடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சாந்தனு
நடிகரும், விஜய்யின் தீவிர ரசிகனுமான சாந்தனு தன்னுடைய எக்ஸ் தள பதிவில், விஜய் அண்ணாவுக்கு இது பெரிய நாள். உங்கள் முதல் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் அண்ணா, அவரின் பேச்சை கேட்கவும், தவெக கட்சியின் கொள்கைகளை அறியவும் ஆவலோடு இருக்கிறேன் என சாந்தனு பதிவிட்டுள்ளார்.
எந்த வேர்வைக்கும், வெற்றிகள் வேர் வைக்கும்.!
jayam ravi to sivakarthikeyan here the list of celebrities wishes for vijay tvk maanaadu