தளபதி விஜய்க்கு இன்று 51-வது பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி தெறிக்கிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் அவரது கடைசிப் படமாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ளார். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், இதுவே கடைசிப் படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#JanaNayagan – https://t.co/5uhUFc0Alt 🔥🔥🔥
Happiest birthday dearest #Thalapathy @actorvijay sir ❤️❤️❤️#TheTrueLeader Theme 🥁🥁🥁#JanaNayaganTheFirstRoar #HVinoth directorial 🤗🤗🤗 @KvnProductions @hegdepooja @thedeol @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @PharsFilm… pic.twitter.com/OPqQPqMtBI
— Anirudh Ravichander (@anirudhofficial) June 21, 2025
இன்று (ஜூன் 22) விஜய் பிறந்தநாள் என்பதால் ஏற்கெனவே ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ ஒன்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அதிக வியூஸ்களை பெற்றுள்ள நிலையில், தற்போது போலீஸ் சீருடையில் விஜய் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.
இதில் 2026, ஜனவரி 9-ம் தேதி அன்று பொங்கல் வெளியீடாக படம் வெளியாகும் என்பதும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். அரசியல் பற்றி முழங்கும் படம் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.