ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.