சிவராத்திரி ஸ்பெஷலாக ஆதியோகி சிலை முன் இந்திரஜா ரோபோ சங்கர் கொடுத்த 3 போஸ்..குவியும் லைக்ஸ்..!

ஆதியோகி சிலைக்கு முன் இந்திரஜா ரோபோ சங்கர் மூன்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

indraja robo shankar shivaratri special photos

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் என்பவருடன் இவருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் புது தம்பதிகளாக பங்கேற்றனர்.

ஆனால் இந்திரஜா ரோபோ சங்கர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகினர். சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களின் அடிவாக இருந்து வரும் இவர் குழந்தைகளுடன் கோவில்களுக்கு செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நேற்று உலகம் முழுவதிலும் சிவராத்திரி கொண்டாட்டம் விமர்சையாக இருந்த நிலையில் ஆதியோகி சிலைக்கும் முன் நின்று மூன்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

indrajaindraja robo shankar shivaratri special photosRobo Shankarshivaratrispecial photosஇந்திரஜா ரோபோ சங்கர்சிவராத்திரிமிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரைரோபோ ஷங்கர்