இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார்.
தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை கவர்ந்ததா என்பதே மீதிக்கதை..
முதல் பாதி நெகிழ வைக்கிறது. மறுபாதி சலிக்க வைக்கிறது. அம்மா அப்பாவை நினைத்து உருகும் நிகழ்வில், தனுஷ் வழக்கம்போல நடிப்பை மெய்சிலிர்க்க வைக்கிறார். நித்யா மேனன் வெகுளி நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிரூட்டி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் இட்லி நன்றாகவே வெந்திருக்கிறது. ஒளிப்பதிவும் மிகச் சிறப்பு. அதெல்லாம் இருக்கட்டும, படம் எப்படி என்றால், புலியை நினைச்சு பூனை சூடு போட்டா உடம்பு புண் ஆயிரும். தனுஷ் நல்லா நடித்திருக்கிறார். அதுவே அவருக்கு பெருமை, போதும்.
பார்த்திபன் சமுத்திரக்கனி கேரக்டர்ஸ் ஓகே. முக்கியமா அருண் விஜய் ஓகே. எதுக்கு இவ்வளவு ஃபில்டப் கேரக்டர்ஸ் என்பதும் கேள்வியாக எழுகிறது.
அப்றம், ஏற்கனவே தனுஷ் சொன்னது போல, ‘ எங்க அப்பா அப்போ டைரக்டர் ஆகல. அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஏற்பட்ட வறுமை. எனக்கு இட்லி வாங்க கூட காசில்ல. அந்த வாழ்வியலை கற்பனை கலந்து படமா பண்ணிருக்கேன்’ என்றார்.
அப்றம், ஏற்கனவே தனுஷ் சொன்னது போல, ‘ எங்க அப்பா அப்போ டைரக்டர் ஆகல. அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஏற்பட்ட வறுமை. அந்த வாழ்வியலை கற்பனை கலந்து பண்ணிருக்கேன்’ என்றார்.
சிறு பட்ஜெட்டில் உருவாகும் சில படங்கள் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் இட்லி கடை விரித்திருக்கிறார் தனுஷ். வெல்டன்.. பட், கஸ்டமர்ஸை திருப்திப்படுத்தவில்லையே.!
இட்லி கடை திரை விமர்சனம்
- Rating