லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத்.

இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், ‘லியோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும். எனக்கு சிறு கதாபாத்திரம் கொடுத்ததால், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். லோகேஷ் என்னை வேஸ்ட் செய்துவிட்டார்.

ஆனால், விஜய்யுடன் சேர்ந்து நடித்தது பிடித்திருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். ‘கூலி’ படத்தை பார்க்க காத்திருக்கிறேன்.

ரஜினி ரொம்ப அடக்கமானவர். சூப்பர் ஸ்டார் என்றாலும் பந்தா இல்லாத மனிதர் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அஜித்குமாரும், நானும் நெருங்கிய நண்பர்கள். ஐ லவ் அஜித் சார்’ என கூறியுள்ளார்.

தற்போது, பாலிவுட்டை போன்றே தென்னிந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சஞ்சய் தத். யஷின் கே.ஜி.எஃப். 2 படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, த்ருவா சார்ஜாவின் KD படத்தில் நடித்திருக்கிறார்.

i love ajith sir to sanjay dutt speech
actor sanjay duttRajinikanthvijayசஞ்சய் தத்லோகேஷ் கனகராஜ்