ஹிரித்திக்-ஜூனியர் என்டிஆர் நடித்த ‘வார்-2’ படம் ஓடிடி.யில் வெளியீடு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் ‘வார் 2’. ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘வார்’. இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ‘வார்-2’ படம் எடுக்கப்பட்டது. அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கிலும் ‘வார் 2’ தோல்வியடைந்தது.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய வில்லனை எதிர்த்து போராடுகின்றனர். அந்த போராட்டத்தில் இவர்கள் வென்றார்களா, இல்லையா என்பது தான் படத்தின் கதை. ‘கூலி’ திரைப்படம் வெளியானதால், வார்-2 படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் ‘வார் 2’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளம் பெற்றுள்ளது. நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் இப்படத்தை 8 வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், இதுவரை ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

hrithik roshan starring war 2 movie is expected to release on ott
coolie movieHrithik Roshanwar 2 movieரஜினிகாந்த்ஜூனியர் என்.டி.ஆர்