Browsing tag

ஜூனியர் என்.டி.ஆர்

ஹிரித்திக்-ஜூனியர் என்டிஆர் நடித்த ‘வார்-2’ படம் ஓடிடி.யில் வெளியீடு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் ‘வார் 2’. ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘வார்’. இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் […]

ஒரேநாளில் வெளியான கூலி, வார்-2 படங்கள்: கலெக்‌ஷன் விவரம்..

ஜூனியர் என்.டி.ஆர் – ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து நடித்த ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘வார் 2’ ஆகஸ்ட் 14-ந்தேதி பான் இந்தியா அளவில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரத்துடன் திரையில் இடம் பெறுகிறார் என்பது டோலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 85 கோடி முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் […]

ஹிருத்திக்-ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘வார்-2’ படத்திற்கு சென்ஸாரின் அதிரடி நடவடிக்கை..

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆக்‌ஷன் படமான ‘வார்-2’ வருகிற 14-ந்தேதி ‘கூலி’ படத்துடன் களம் இறங்குகிறது. வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், சென்சார் வாரியம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ‘ஆவன் ஜாவன்’ பாடலில் இடம்பெற்ற கியாரா அத்வானியின் பிகினி காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. காட்சி மாற்றங்களைத் தவிர, 6 வெவ்வேறு ஆடியோ-விஷுவல் பிரிவுகளில் உள்ள முறையற்ற குறிப்புகளை முடக்குமாறும், அசிங்கமான வசனத்தை மாற்றுமாறும், மேலும் […]

காந்தாரா-3 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்..

‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் […]