பிக் பாஸ் அன்சிதா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அன்ஷிதா.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவாக சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் புதிய தொடக்கங்கள்.. என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல கடவுளின் பரிசு கடினமான காலத்தில் என்னுடன் நின்றவர்களுக்கு அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.