அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்ஸ்; இது ஜேம்ஸ்பாண்ட் கதையா?

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள் கமிட்டாக உள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் கொடுத்து கவனம் ஈர்த்தார்.

பின்னர் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பான் இந்திய அளவில் வெளியாகும் இப்படத்திற்கு, கதைக்களத்தின்படி 5 ஹீரோயின்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

அதில், அமெரிக்க, கொரிய உள்ளிட்ட மூன்று மொழி நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டுள்ளார்.

மேலும், முக்கிய ஹீரோயின்களாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என்றும் தெரிகிறது. மேலும், இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வகையில், அல்லு அர்ஜுனுக்கு முதலில் வரும் ஜோடி யார்? அதன் பின் தொடர்பவர் யார்? இப்படம் ஜேம்ஸ்பாண்ட் கதைகளின் கலவையாக இருக்குமோ? என்ற நெட்டிசன்ஸ் கேள்விகள் தொடர்கின்றன.

five heroines in actor allu arjun and director atlee film
actor allu arjunactor vijaydirector atleeஅல்லு அர்ஜுன்ஜான்வி கபூர்