விஜய்யின் தவெக கட்சியில் கீர்த்தி சுரேஷ்: ரசிகர்கள் கோஷம்..

தவெக கட்சியில் கீர்த்தி இணையவுள்ளாரா? என காண்போம்..

திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி் சுரேஷ். கடைசியாக தெலுங்கில் அவர் நடிப்பில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது, சினிமா மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொள்கிறார் கீர்த்தி. அவ்வகையில், ஈரோட்டில் கடை ஒன்றை திறந்து வைத்தார் கீர்த்தி. பிறகு ரசிகர்கள் மத்தியில் பேச ஆரம்பித்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் திடீரென தவெக, தவெக என விஜய்யின் கட்சிப் பெயரை கோஷமிட ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி தெறிக்கிறது.

வெளியான ஒரு தகவலில், ‘கீர்த்தி சுரேஷ் விரைவில் தவெகவில் இணையப்போகிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும்,
அதையெல்லாம் மனதில் வைத்துதான் ரசிகர்கள் இப்படி கோஷமிட்டதாக ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.

முன்னதாக, கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், தனி விமானத்தில் விஜய், திரிஷாவுடன் வந்து கலந்து கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

fans chanted tvk when keerthy suresh opened the store
actor vijayactress keerthy sureshpoliticsதிரிஷாநடிகை கீர்த்தி சுரேஷ்