துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன.
- Advertisement -
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துல்கர் சல்மானின் தேர்ந்தெடுத்த கதைகள், இயக்குநர் பவன் சாதினேனியின் தனித்துவமான அணுகுமுறை மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பு ஆகியவை ‘AOT’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘AOT’ திரைப்படம் வெளியாக உள்ளது.