துல்கர் சல்மான் தனது 40-வது படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய தகவல் பார்ப்போம்..
தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ஓடிடி.யில் செம வரவேற்பு பெற்று, தற்போது முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.
இந்த உற்சாகத்தில் துல்கர் சல்மான், அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ இயக்குநர் நிஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். இதனிடையே செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள ‘காந்தா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்த 40-வது படத்தை துல்கர் சல்மானே தயாரித்து நடிக்கவுள்ளார். ஆக்ஷன் டிராமாவான ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் இயக்குனர் நிஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். இப்படத்துக்கு I’m Game என ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ளது. இப்படமும் பான் இந்திய அளவில் வெளியாகிறது.
சமீபத்திய துல்கர் சல்மானின் படங்கள் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று வருவதால், இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு. முன்னதாக, ஜி.வி.பிரகாஷ் நடித்து, தயாரித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் வரும் 7-ந்தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.