கல்லூரிக்கு வந்த மாணவன் ‘டிராகன்’ பாஸா ஃபெயிலா?: திரை விமர்சனம்

‘கற்கை நன்றே; அதன் பின் காதல் நன்றே.!’ இதான்ங்க படத்தோட ஒன்லைன்.

‘அதாவது, உயர்ந்த கட்டிடமாக இருப்பினும், அஸ்திவாரம் சரியில்லையென்றால் ஒரு நாள் விழுந்துவிடும்’ என்பதே எதார்த்தம். இதில், “அஸ்திவாரம்” என்ற வார்த்தையைதான் “கல்வி” என்ற மையக்கருவாகக் கட்டமைத்து ‘டிராகன்’ திரைப்படத்தை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இனி, இப்படம் குறித்த ரிவ்யூ ஹாலுக்குள் செல்வோம்..

கல்லூரியில் படிக்கும் ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) ‘டிராகன்’ என்ற அலப்பறை பெயரோடு பேட் பாயாக வருகிறார். இவரது அடாவடியால் வசீகரிக்கப்பட்ட சக மாணவியான கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) இவரை காதலிக்கிறார். இருவரும் லிப்லாக் ரேஞ்சில், கல்லூரியில் காதலாய் சிறகடித்துப் பறக்கின்றனர்.

இச்சூழலில், ராகவனுக்கு 48 அரியர்ஸ் வந்து சேர்கிறது. இதனால் பிரின்சிபல் (மிஷ்கின்) எடுக்கும் கடும் நடவடிக்கையால் ராகவன் கல்லூரியில் இருந்து முற்றாக வெளியேறுகிறார்.

தான் காதலித்த கீர்த்தியோ, தனது வீட்டில் பார்த்த ‘வெல் செட்டில்டு’ அதாவது மாதம் ரூபாய் 1.20 லட்சம் சம்பளம் பெறும் பையனுக்கு மனைவியாய்ச் சென்று விடுகிறாள்.

இதனால், ஆத்திரமடைந்த ராகவன் விரைவிலேயே பெரிதாக சம்பாதிக்க எண்ணுகிறான். நிலத்தை விற்று 10 லட்சத்தில் ஃபேக் சர்டிபிகேட் பெற்று, பிரபல (கௌதம் வாசுதேவ் மேனன்) கம்பெனியில் மேனேஜர் ஆகிறான். கார், பங்களா உடன் பெருமையாய் அம்மா அப்பாவுக்கும் அறுபதாம் கல்யாணமும் நடத்தி வைத்து ஹானஸ்ட்டாய் காட்சியளிக்கிறான்.

இத்தகு குடும்பம் பிடித்ததனால், தொழிலதிபராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் தனது மகள் பல்லவியை (கயாடு லோஹரை) ராகவனுக்கு மணமுடிக்க சம்மதிக்கிறார்.

இந்நிலையில், நல்ல வரனுக்காக மேட்ரிமோனியில் ப்ரொஃபைல் பார்த்த பிரின்சிபலின் மகள் ஹரிணி, ராகவனை செலக்ட் செய்கிறார்.

அதிர்ச்ச்சியடைந்த மிஷ்கின், ‘ராகவனுக்கு மேனேஜர் வேலை எப்படி சாத்தியமாயிற்று? என அவன் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று விசாரிக்க, ராகவன் உண்மையைச் சொல்லி அவரது காலில் விழுந்து கெஞ்சுகிறான்.

இதற்கு அவர், ‘மறுபடியும் நீ கல்லூரியில் சேர்ந்து 48 அரியரையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்’ என பிளாக் மெயிலாய் மிரட்டுகிறார்.

ராகவன், மறுபடியும் கல்லூரிக்குள் வருகிறான். ‘கண்ணை கட்டிக் காட்டில் விட்டவனுக்கு வழியேது தெரியும்’ என்ற விழி பிதுங்கிய பித்து நிலையாய்த் தத்தளிக்கிறான்.

விஷயம், பெற்றோருக்கும் மணவீட்டாருக்கும் தெரியும்முன், படித்துத் தேறிட பாடாய்ப்படுகிறான்.

இந்நெருக்கடியில், இந்த கல்லூரிக்கு- இவன் வகுப்புக்கு புதிய லெக்சரராய் கீர்த்தி (அனுபமா) வருகிறார்.

அப்புறம்., எக்ஸ் லவ்வரான கீர்த்தியிடம் எக்ஸ் டிராகனான ராகவன் ஒழுங்காகப் படித்துத் தேர்ச்சி பெற்றானா..? பின்னர், யாரை மணம் முடித்தான்..?

— என்ற வேதியியலாய் மாற்றமாகும் மாணவர் வாழ்வியலை, போரடிக்காமல் அறிவுறுத்தி இருக்கிறது மீதிக் கதை.

படத்தில், ‘குதறிய தலைமுடியுடன்’ பிரதீப்பின் கேரக்டர் மெட்டீரியல் இளசுகளை ஈர்த்திருக்கிறது. காமெடி டைமிங், லவ் பேக்கப் ஆன ஃபீல், ஃப்ரெண்ஷிப் சப்போர்ட் என அதிரி புதிரியாய் அசத்தியிருக்கிறார்.
சரக்கு, தம், கெட்டவார்த்தைகளை சற்றுக் குறைத்திருக்கலாம் இயக்குனரே.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு க்யூட்டாகவும், லியோன் ஜேம்ஸின் இசை ஸ்வீட்டாகவும் ருசிக்கிறது. மேலும், சிம்பு குரலில் ‘ஏன்டி என்னை விட்டுப் போன’ ஸாங் பிக்சரைஷிங் செம; காதல் வலியில் வேற லெவல்.!

மொத்தத்தில், கல்லூரி வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்.. அரியர் வச்சா மாஸ் இல்ல, படிக்கிறது தான் மாஸ்’ என்பதை உணர்த்தும் “பாடம்.!”

‘கெத்து காட்டுனா பொண்ணுங்க ரசிப்பாங்க. ஆனா, லைஃப்ல செட்டில் ஆனாதான் கூட வருவாங்க’ என்றே அடிக்கும் “லாடம்.!”

சுருக்கமா இந்த படத்துல, பாடத்துல இவன் பாஸா ஃபெயிலான்னு கேட்டா, ‘மோஸ்ட் சக்சஸ்ஃபுல் குட் ஸ்டூடண்ட் ‘டிராகன்’. இவன் சிரிக்க வைக்கிறான், கலங்க வைக்கிறான், ரசிக்க வைக்கிறான், கசக்கும் மருந்தோடு தேன் கலந்து புசிக்க வைக்கிறான்.

ஸோ.. இவனை மிஸ் பண்ணிராதீங்க ப்ரோ..
லைஃப்ல பாஸிட்டிவ் செலப்பஸ் வேணும்ல.!

80%

'டிராகன்' திரை விமர்சனம்

  • Rating
'டிராகன்' திரை விமர்சனம்'டிராகன்' விமர்சனம்Anupama ParameshwaranDragonDragon Movie ReviewDragon ReviewGautham Vasudev MenonHarshath KhanIndhumathy ManigandanKayadu LoharKS Ravi KumarMariam GeorgeMysskinPradeep RanganathanThenappanVj Siddhuடிராகன்