வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளிய டிராகன் படம்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது டிராகன் திரைப்படம்.

dragon movie beat vidamuyarchi collection

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது விடாமுயற்சி படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் டிராகன் பட குழு 100 கோடி வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து விடாமுயற்சி படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளி உள்ளது டிராகன் திரைப்படம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dragon movie beat vidamuyarchi collection
'டிராகன்' படம்beatcollectiondragon moviedragon movie beat vidamuyarchi collectionVidamuyarchiஅனுபமா பரமேஸ்வரன்ஏஜிஎஸ் நிறுவனம்கௌதம் மேனன்மிஷ்கின்