‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து காதல் கதையொன்று உருவாக்கவுள்ளதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சிம்பு. கமலுடன் இணைந்து இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார்.
முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார் சிம்பு.
இதனையடுத்து தற்போது ரிலீசாகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது தவிர ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். எஸ்டிஆர் 49-ஆக இப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகின. இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50- வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை சிம்புவே தயாரிக்கவுள்ளார்.
இதனையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு தனி ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படம் காதல் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய காதல் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் தனி இடமுண்டு. ஆதலால், இப்படம் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், படத்தில் பணியாற்ற உள்ள பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.