டாப் வியூஸ் ‘சிக்கந்தர்’: ஷாருக்கானை முந்துவாரா சல்மான்கான்?

‘ஜவான்’ பட வசூலை முறியடிக்குமா ‘சிக்கந்தர்’ படம்?. இது தொடர்பாக வியூஸ் என்ற நியூஸ் பார்ப்போம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்- ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று ‘சிக்கந்தர் நாச்செ’ எனும் செகண்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

புஷ்பா-2 படத்தில் ‘பீலிங்ஸ்’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடியதையே மறக்க வைக்க செய்தார் ராஷ்மிகா மந்தனா. ‘சிக்கந்தர் நாச்சே’ பாடலில் அதிகம் ஆடவில்லை என்றாலும், கவர்ச்சியை தாராளமாக காட்டி கிறங்கடித்துள்ளார்.

நேற்று வெளியான இந்த பாடல் 20 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸ் அள்ளி இந்திய அளவில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. ஓவர் நைட்டில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் 1000 கோடி ரூபாய் வசூலான நிலையில் ‘சிக்கந்தர்’ திரைப்படம் பாலிவுட்டின் அடுத்த 1000 கோடி ரூபாய் படமாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரம்ஜான் முடிந்த சில தினங்களில் படத்திற்கான வரவேற்பு தெரிந்துவிடும். பார்க்கலாம்.

'sikandar' movieactress rashmika madannaAR MurugadossMusicசல்மான்கான்ஷாருக்கான்