துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துருவ் விக்ரம் இதுவரை நடித்திராத வகையிலான கமர்ஷியல் ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடிக்கிறார்.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் துருவ் விக்ரம் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் பிரவுன் நிற உடையில், ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது தீவிரமான பார்வை மற்றும் ஆக்ரோஷமான உடல்மொழி, கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நேரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் காமிக் புக் பாணி காட்சியமைப்பும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

‘No Retakes Allowed’ என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், ‘ஜாக்கி’ ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் காட்டுகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விக்ரம் மோர் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

Dhruv VikramDhruv Vikram’s New Film Titled Jackie - No Retakes AllowedJackie - No Retakes Allowed