Browsing category

Tamil Cinema News

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களைக் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது. மிடில் ஏஜ் ஆணுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதை டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் உருவாகும் […]

நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்​நிதி – அமீரின் ‘வேட்ட சாமி’

7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், […]

‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸின் ஹாட்ரிக் சாதனை!

மலையாளத் திரைப்படங்களை கேரள எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், தொடர் வெற்றிகளின் மூலம் விநியோகத் துறையில் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறது. ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் மூலம் நிறுவனம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து […]

அல்லு அர்ஜுனின் புதிய மைல்கல் சாதனை!

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அவரது திரைப்பயணத்தில், இந்த அங்கீகாரம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா ரசிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் என அல்லு அர்ஜுன், பிராந்திய சினிமாவின் எல்லைகளை கடந்து இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் […]

திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகன்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’, ‘சுழல் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் மஞ்சிமா மோகன், தற்போது தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. […]

நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ர.கார்த்திக், தற்போது தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான ‘கிங் 100 – KING 100’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமான பான் இந்திய நடிகர் […]

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரமான திரையிருப்பு, உற்சாகமான நடனம் மற்றும் எனர்ஜி நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் […]

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்

தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் […]

16வது ஆண்டு திருமணத்தை ஒட்டி மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இன்று தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, […]