குட் பேட் அக்லி ஷூட்டிங்கில், அஜித்துடன் திரிஷா மோதலா?: வெளியேறியது ஏன்?
சினிமா உலகைப் பொறுத்தவரையில், நடிகரானவர் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், நடிகையானவர் ஹீரோயினியாகவே தொடர முடியாது. அவ்வகையில், விதிவிலக்காக மார்க்கெட்டில் தனித்து நிற்பவர்களில் திரிஷா குறிப்பிடத்தக்கவர். 41 வயதிலும் இளமை ததும்ப ததும்ப இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார் திரிஷா. […]