Browsing category

News

சவால் விட்ட சுந்தரவல்லி, சூர்யா எடுக்கப் போக முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் நான் உனக்கு பெர்ஃப்யூம் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார். சரி நான் […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். […]

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 […]

கெனிஷாவுடன் ரவிமோகன் இலங்கை பயணம்; ஏன் தெரியுமா?

ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது. ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெனிஷா ஏராளமான ஆல்பம் பாடல்களில் பாடியிருக்கிறார். மேலும், பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று […]

மீண்டும் அஜித் சாருடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்..

‘தல’ அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவில் இருந்து கிளம்பும்போது தெரிவிக்கையில், அடுத்து அஜித் […]

புதுமுகங்கள் நடித்த ‘சயாரா’ திரைப்படம்; செம கலெக்‌ஷன்..

பாலிவுட் சினிமாவில், மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தில் அறிமுகம். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது. முதல் நாளில் 20.75 கோடி, 2-வது நாளில் 23.50 கோடி என வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் புக்கிங் […]

‘பேர்ட் கேர்ள்’ டீசரை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேர்ட் கேர்ள்’ டீசர் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பார்ப்போம்.. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் […]

மினுமினுக்கும் உடையில் தர்ஷா குப்தா.. போட்டோஸ் இதோ..!

மினுமினுக்கும் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் அத்திவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

கல்யாண மண்டபத்துல இலை எடுத்தேன் ஆனால்? விஜய் டிவி புகழ் ஓபன் டாக்.!!

விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி ,1947 ,வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் வைரலாகி உள்ளது. அதாவது […]

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், […]