Browsing category

News

தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது

பிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது ! ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, […]

‘பெத்தி’ படத்துக்கான 1000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்ட பாடல் படப்பிடிப்பு!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!! குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் […]

தரன் இசையில் முதன் முறையாக இணையும் ஆரி அர்ஜுனன் மற்றும் நரேன் கார்த்திகேயன்!

சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் சின்னத்திரையில் பல ஷோகளை தயாரித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. இந்த கிம்ச்சி தோசா இசை வீடியோ ஆல்பம் மூலம் தனது இசை கம்பெனியான Cheers music என்ற ஆடியோ லேபிள் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த பாடல் இந்தோ கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.. இந்த சியர்ஸ் […]

இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. ‘கெவி’ : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ‘மாயக்கூத்து’: ‘மாயக்கூத்து’ என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி […]

எனக்கு சம்பாத்தியம் இல்லை, குடும்பத்தில் கருத்து மோதலும் இல்லை: ஆர்.கே. செல்வமணி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் செம்பருத்தி, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். அவ்வகையில், அவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி, தன் மனைவி ரோஜா மீதான காதல் குறித்தும், குழந்தைகள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் சம்பாதித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இப்போதும், அதே மரியாதை […]

‘கூலி’ பட உண்மையான வசூல் நிலவரம்: ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் எச்சரிக்கை..

‘கூலி’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து சில குழுக்களும், அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘உண்மையான வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர்களும், ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் (வெளிநாட்டு விநியோகஸ்தர்) நிறுவனமும் மட்டுமே வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இணையத்தில் பரவும் மற்ற பாக்ஸ் ஆபீஸ் நம்பர்கள் நம்பகத்தன்மையற்றவை, அவை உண்மையாக கருதப்படக்கூடாது. மேலும், இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடுகளைப் பரப்புவது, திரைப்படம், […]

நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் […]

கடவுளை ஏமாற்ற முடியாது: ஆர்த்தியின் பதிவு..

ரவிமோகன்-ஆர்த்தி வாழ்வியல் விவகாரம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது’ என ஆர்த்தி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில், அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி வலைதளங்களில் வைரலானது. ரவிமோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு […]

விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..

நடிகர் சூரி கதையெழுதி நடித்த ‘மாமன்’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘மண்டாடி’ படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். […]

பிரதீப் நடித்த 2040-ம் ஆண்டு காதலாக lik டீசர், விக்னேஷ் சிவனின் கிரியேட்டிவிட்டி..

எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை. 1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட lik […]