Browsing category

News

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிகை வித்யாபாலன்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில் ‘ஜெயிலர்’ மிக முக்கியமான படம். அவரது மாஸ், அவரது ஸ்டைல் என அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்தி திரைக்கதை அமைத்து படமாக்கினார் நெல்சன். படத்தின் தரத்தையும் தலைவரின் மாஸையும் பல மடங்கு கூட்டி வைத்தார். படம் திரையரங்கில் வெற்றி வாகை சூடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதேபோல், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் ரஜினிக்கு […]

யோகிபாபுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு: தொகுப்பாளினி பாவனா விளக்கம்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின்போது, யோகிபாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த பலரும் ‘பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா? என கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள்; பாவனாவை திட்டி வந்தார்கள். இந்நிலையில், பாவனா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் ஜாலியாக […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. எதிர்நீச்சல் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

விரைவில் சன் டிவி சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னதிரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் உங்களுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். எத்தனை புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முதல் மூன்று இடத்தை சன் டிவியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் முக்கிய தொடரான ராமாயணம் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் உருவாக்கப்பட்டு டப்பிங் செய்து ஒளிபரப்பாகும் இந்த […]

சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சிவாங்கி..!

வித்தியாசமான சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதன் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை கொடுத்து அசத்தி இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

பிக் பாஸ் வினுஷா தேவி நடிக்கப் போகும் புதிய சீரியல்.. எந்த சேனல் தெரியுமா?

பிக் பாஸ் வினுஷா தேவி புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பனி விழும் மலர் வனம் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். விஜய் டிவியிலேயே மீண்டும் ஒரு புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க […]

‘மதராஸி’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ், மற்றும் நடவடிக்கை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் -சிவகார்த்திகேயன் முதல்முறையாக இணைந்திருக்கும் ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் என படக்குழு பல மாநிலங்களில் ‘மதராஸி’ பட ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இப்படத்திற்கு சென்சார் குழு U /A சான்று வழங்கியுள்ளது. படத்தில் ஒரு சில காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் இந்த U /A […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார். மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த மிர்னா, தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ‘ஜெயிலர்-2’ படத்திலும் நடித்து வருகின்றார். இவர், லோகேஷ் ஹீரோவாக நடிக்கப்போகும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால், இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் […]

ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ரஜினி குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘எனக்கான ஊக்கம், ஆதர்சம் எல்லாமே ரஜினி சார் தான். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமாவை பிடித்தது. அவரைப் பார்த்து தான் சினிமாவுக்கு […]