Browsing category

News

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உலகநாயகன் கமல்ஹாசனை சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்தனர். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், திரையுலகின் முன்னோடியும், முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவருமான கமல்ஹாசனை சந்தித்து அவரது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்ததாக எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சினிமாவில் பல திறமையான எழுத்தாளர்கள் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த முன்னோடி எழுத்தாளராக கமல்ஹாசன் திகழ்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘மகாநதி’, ‘அன்பே […]

ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ – நன்றி தெரிவித்த படக்குழு!

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, ‘மொத ராத்திரி’ படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி என்றும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ராஜா கருப்பசாமி கதை […]

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தனர். ஏற்கெனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் வெகுவாக பாராட்டியதுடன், படக்குழுவினரின் முயற்சிகளுக்கும் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், […]

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘சண்டக்காரி’

‘த்ரிஷ்யம்’ புகழ் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் செயல்பட்டு வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் […]

மோகன்லால் நடிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஆபரேஷன் கங்கா’!

மோகன்லால் நடிப்பில், இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இயக்குநர் விஷ்ணு மோகனின் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு […]

பாடகி தீ – லாரா ராஜ் கூட்டணியில் உருவான ‘வாரி வாரி’ ரீமிக்ஸ்!

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ, அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த ‘வாரி வாரி’ பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியிருந்தார். தீயின் குரலில் வெளியான இந்த தமிழ் இண்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

கட்டா குஸ்தி 3 வரலாம்! – 50வது நாள் விழாவில் விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், வெளியாகி 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படம், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. படத்தின் 50வது நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் சிறப்பு வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் […]

வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘சிறகடிக்க ஆசை’ நடிகை ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். பெண்களுக்கான புடவைகள் முதல் குழந்தைகளுக்கான ஆடைகள் வரை ஏராளமான புதிய மாடல்கள் மற்றும் டிரெண்டிங் கலெக்ஷன்கள் வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றுள்ளன. லைட் கலர், பாஸ்டல் கலர், கான்ட்ராஸ்ட், டிசைனர் மற்றும் காட்டன் புடவைகள் என பல்வேறு வகையான கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு […]

வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘பிக் பாஸ்’ தாமரை செல்வி!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ‘பிக் பாஸ்’ பிரபலமான தாமரை செல்வி உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். ஷாப்பிங் அனுபவம் குறித்து பேசிய தாமரை செல்வி, தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், வேலவன் ஸ்டோர்ஸுக்கு அருகிலேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் இருப்பதால் சிரமமின்றி ஷாப்பிங் செய்ய முடிவதாக தெரிவித்தார். மேலும், பெண்களுக்கான புடவைகள், பிளவுஸ்கள், நைட்டிகள், சுடிதார் மெட்டீரியல்கள், […]

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’ பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி […]