Browsing category

News

ஜனநாயகன், பராசக்தி படங்களின் இசை விழா: சிறப்பு விருந்தினர்கள் யார் யார்.?

மலேசியாவில், விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்பவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ். எனவே தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் […]

‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் என்ன?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை. இருப்பினும், ‘பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என கணிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் பற்றப் பார்ப்போம். அதாவது, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மீசையில்லாமல் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் […]

அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?: ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்..

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எஜமான்’ படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு: ‘ரெட் லேபில்’ படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத, கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது […]

சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: இயக்குநர் பேரரசு வலியுறுத்தல்..

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பேரரசு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் […]

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம், விஜய் சேதுபதி இருவரும் இணையும் படத்தின் நாயகியாக சாய் […]

மலேசியாவில் அஜித்துடன் சிம்பு சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அங்கு இயக்குநர்கள் சிவா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி வருகின்றார். மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தை சிவா இயக்கவுள்ளார். அதற்காக இருவரும் மலேசியாவில் அஜித்துடன் இருக்கின்றனர் என கூறப்படுகிறது. தற்போது, சிம்புவும் அஜித்தை மலேசியாவில் சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவும் தற்போது மலேசியாவில் […]

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஹேப்பிராஜ்’ டைட்டில் வைக்க காரணம்..

ஜி்.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தாலும், கதாநாயகனாகவும் வலம் வருபவர். இவர், கடைசியாக நடித்த ‘பிளாக் மெயில்’ படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடித்து வந்தார். இப்படத்தினை […]

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர்; ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் அப்டேட்ஸ்..

கார்த்தி மற்றும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகவுள்ளது. சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வா வாத்தியார்’ பட டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் […]

ஏ.எல்.விஜய் கேமிரா பிடிக்க ‘அஜித் ரேஸிங்’ படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது?

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று தயாராகி வருகின்றது. அதாவது, கடந்த ஒரு வருடமாக பல நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றார். அதையெல்லாம் தொகுத்து ஒரு ஆவணப்படமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மலேசியாவில் ஏ.எல்.விஜய்யும் இருக்கின்றார். ஒரு […]

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]