Browsing category

Latest News

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ‘ருத்ரா’ தோற்றம் வெளியீடு!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படக்குழு, மகேஷ் பாபு நடிக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை கம்பீரமான தோற்றத்தில் காண முடிகிறது. மற்றொரு புகைப்படத்தில் கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில் ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு மத்தியில் ருத்ரா அதிகார தோரணையில் காட்சியளிக்கிறார். உலகம் முழுவதும் பயணிக்கும் நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாக […]

சந்தோஷ் நாராயணன், முத்து கூட்டணியில் மன்னாரு பாடல் வெளியீடு

தமிழ் இசை உலகில் புதிய இசைப் பயணத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் ‘மன்னாரு’ பாடல் வெளியாகியுள்ளது. மன்னர் முத்து தனது தனித்துவமான குரலில் பாடியுள்ள இப்பாடலை கென் ராய்சன் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான காட்சிகளுடன், உற்சாகம் நிறைந்த இசையும் இணைந்துள்ள ‘மன்னாரு’ பாடல் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்தப் பாடல், […]

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் பட டிரைலர் வெளியானது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யாஷின் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரு சக்திகளின் மோதல், சோதிக்கப்படும் விசுவாசங்கள், சிக்கலான உறவுகள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதையை மையமாகக் கொண்டு இப்படத்தின் பிரம்மாண்ட உலகத்தை டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி போன்ற […]

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட டிரைலர்!

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் இனிமையான தருணங்களை ஒன்றிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான திரைப்பட அனுபவத்தை வழங்கும் படமாக இது உருவாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதைக் […]

கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் […]

செவிலியர்கள் கஷ்டம் பேசும் செய் செய்யாதே படம் – ஹெச். ராஜா

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறையினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பாராட்டு தெரிவித்த சிறப்பு விருந்தினர்கள், சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட இந்தப் படம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதவை” – ஃபைவ் ஸ்டார் […]

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் டீசர் வெளியானது

‘தி பாரடைஸ்’ டீசர் வெளியீடு: நானியின் மிரட்டலான அவதாரம்… அனிருத்தின் பின்னணி இசையில் மிரள வைத்த பிரம்மாண்ட காட்சிகள்! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ (The Paradise), இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஆயா ஷேர்’ பாடல் என வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் […]

மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

மலையாள சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குப்பி’ படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, டொவினோ தாமஸ் மற்றும் ஜான்பால் ஜார்ஜ் இணைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவே இருவரும் மீண்டும் இணையும் புதிய […]

மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பும் ‘மூடர் கூடம்’… ‘மிஷன் பாசிபிள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘மூடர் கூடம்’ திரைப்படம், 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறும் தொடர்ச்சிப் படமாக […]

மணிகண்டன் போலீஸாக நடிக்கும் மக்கள் காவலன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும், சமூக அக்கறை கொண்ட வலுவான கதையையும் இணைக்கும் முயற்சியாக உருவாகிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் கே. மணிகண்டன் தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் […]