Browsing category

Latest News

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் […]

ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா: அரசியல், திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்று புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் […]

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய […]

‘சிக்மா’ படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தான் முதல் காரணம் – சந்தீப் கிஷன்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், ‘சிக்மா’ திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கும் தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் முக்கியமான படம் எனக் குறிப்பிட்டார். ஜேசன் சஞ்சய் படத்தின் மேக்கிங்கில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக […]

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். காதல், இளமை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் தருணங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏகன், ‘ஹைக்கூ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட […]

சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது. ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஜ்மல் ஷபு மேற்கொள்ள, கலை இயக்குநராக அஸ்வினி காலே […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகள் எழுதியுள்ளார். வழக்கமாக துள்ளலான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் அப்யங்கர், இந்தப் பாடலில் மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். ஒரு தந்தை தனது மகளிடம் அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிளாக் பாண்டி

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து வெளியேறுகிறார். அவரது உடல்நிலைக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதால், வீட்டை விட்டு வெளியேறி தேவையான சிகிச்சையைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் பிளாக் பாண்டி உணர்வுப்பூர்வமாக விடைபெற்றார். அவர் வீட்டை விட்டு வெளியேறத் தயாரானபோது, சக போட்டியாளர்கள் பலரும் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரை கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை […]

பிக் பாஸ் தமிழ் 10: இந்த வாரம் எலிமினேஷன் ரேஸில் 3 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஷதிகா மேற்கொண்ட நாமினேஷனைத் தொடர்ந்து, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரும் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டுமெனில், இந்த வாரம் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மூவரும் உள்ளனர். இதனால் வீட்டிற்குள் பரபரப்பும், போட்டியும் அதிகரித்துள்ளது. நட்பு, தனிப்பட்ட உறவுகள், விளையாட்டு வியூகங்கள் என […]

சேயோன் திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சீமான், தனது காட்சிகளில் நடித்து வருகிறார். அவரது வருகையால் ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ராஜ்கமல் […]