Browsing category

Latest News

‘ரிசார்ட்’ தொடருக்கு புதிய சாதனை – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்தது!

ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உருவெடுத்துள்ளது. ஒளிபரப்பான நாள் முதல் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் வாரந்தோறும் வெளியாகும் புதிய எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தைத் தாண்டியும் பல்வேறு மொழி ரசிகர்களிடம் இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் […]

“இது சின்ன படம் இல்லை… ரொம்ப முக்கியமான படம்” – நடிகை அனுமோல்

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது […]

உலக சினிமாவில் இதுவரை இல்லாத முயற்சி… ‘ONE MAN’ மூலம் தனி மனிதராக சாதித்த சங்ககிரி ராஜ்குமார்!

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தேவையான பல்வேறு பணிகளையும் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான புதிய முயற்சியாக ‘ONE MAN’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு […]

“படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்” – பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், காவேரி என்ற கதாபாத்திரத்தில் அன்பான மனைவியாகவும், பாசமிக்க தாயாகவும் நடித்துள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்தில், […]

ரஜினி வெளியிட்ட ஒரு கைதியின் டைரி மோஷன் போஸ்டர்

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக […]

சின்னத்திரையில் களமிறங்கும் நடிகை சமந்தா

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் MasterChef.. தமிழ் இல்லங்களுக்கும் வருகிறது – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை முன்னெடுக்கும் சமந்தா! உலகம் முழுவதும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான ‘MasterChef’, தற்போது தமிழர்களின் சுவை மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு புதிய வடிவில் ‘Celebrity MasterChef Tamil’ என்ற பெயரில் உருவாகிறது. நடிகை சமந்தா ரூத் பிரபு முன்னிலையில், தமிழ் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். Sony Pictures Networks India […]

பிரபுதேவா – வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியானது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் பிரபு தேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் […]

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜின் ‘SYG’ படப்பிடிப்பு நிறைவு!

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 12-ம் […]

சினிமாவில் 51ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக அவர் உயர்ந்துள்ள நிலையில், அவரது 51 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் ‘தர்மன்’ படக்குழுவினர் இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற […]

பிரபாஸின் ‘ஃபௌஜி’ படத்தில் சுதந்திர தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், டி-சீரிஸ் வழங்கும் நிலையில், வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஃபௌஜி’ படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திரம் கிடைத்ததன் பின்னணியில் இருந்த போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த போஸ்டர் […]