Browsing category

Latest News

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ போஸ்டர்!

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “ரவுடி ஜனார்த்தனா” படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கி வருகிறார். ரூரல் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு […]

‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி – 2” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மேனன் கதாநாயகியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்ற “சிலந்தி” படத்தை ஜி கம்பெனி சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரித்திருந்தார். அந்த வெற்றிக் கூட்டணி தற்போது “சிலந்தி – 2” மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, […]

‘கான் சிட்டி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் […]

ஐபிஎல் தாக்கத்தால் சமந்தாவின் ‘மா இண்டி பங்கம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) மூலம் சமந்தா தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது. ‘ஓ! பேபி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நந்தினி ரெட்டி, மீண்டும் சமந்தாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படம் காதல், குடும்ப உறவுகள் மற்றும் தனிமனித வலிமையை மையமாகக் கொண்ட கதையாக […]

ஏஜிஎஸ் உடன் மீண்டும் இணையும் சந்தானம்: ‘லவ் பைட்’ ஜாம்பி காமெடி திரைப்பட அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நாயகன் சந்தானம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘கோட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம் தயாரிக்கும் தனது 27-வது திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘லவ் பைட்’ (Love Bite) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தானத்தின் முந்தைய வெற்றிப் படமான ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் செல்வின் – சந்தானம் […]

கார்த்தி – மீனாட்சி சவுத்ரி இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி முதன்முறையாக ஜோடி சேரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் எளிய பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தெலுங்கில் ‘மேட்’ (MAD) மற்றும் ‘மேட் ஸ்கொயர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கல்யாண் சங்கர், இந்தப் படத்தின் மூலம் கார்த்தியுடன் இணைகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக (Comedy Entertainer) இது உருவாகவுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் […]

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை: நடிகர் தேர்வுக் குறித்து பரவும் போலித் தகவல்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ (SivaKarthikeyan Productions) மூலம் தரமான படங்களை வழங்கி வரும் இவர், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். […]

உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’

காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தை கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் ‘சைக்கிள் கேப்’! டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படமான ‘சைக்கிள் கேப்’, காதல், இசை மற்றும் உணர்வுகளின் கலவையுடன் உருவாகி வருகிறது. இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கும் இப்படத்தில் நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மியூசிக்கல் காதல் கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘சிந்து பைரவி’, ‘முகவரி’, ‘துள்ளாத […]

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பெத்தி” படத்தின் கதையை முதன்முதலாக கேட்ட தருணமே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா […]

ஆகஸ்டில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக “ஐ அம் கேம்” இருக்கும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரம் மற்றும் படத்தின் உலகமே நவீன […]