Browsing category

Latest News

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு […]

காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை […]

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட […]

கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்தோகை விரிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், […]

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்.. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ […]

விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..

புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்தார். 2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..

‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன். என் கிளையன்ட் பற்றி […]

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகும் ‘சரஸ்வதி’ பட அப்டேட்ஸ்..

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் […]

தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..

மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த ‘தோ தீவானே ஷெஹர் மெய்ன்’ படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தனுஷுடனான காதல் மற்றும் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி மிருணாள் கூறியதாவது, ‘நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். சரியான நபர் என் வாழ்க்கையில் வரும்போது திருமணம் குறித்து நானே முதல் ஆளாக சோஷியல் […]

அஜித் நடிப்பில் 5-வது படம்: இயக்குநர் சிவா அப்டேட்ஸ்..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித். இப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு சிவா, ‘அனைத்தும் சரியாக அமையும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அந்தப் படம் எந்த ஜானர் என்பதை மட்டும் இப்போது ரகசியமாக வைத்திருக்கிறோம்’ என பதிலளித்துள்ளார். வீரம், ‘வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் […]