Browsing category

Latest News

புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..

நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். முன்னதாக தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டதாக […]

சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் இது தான்.. உருக்கமாக பேசிய மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இயக்க வருவதற்கு முன் அவரது வாழ்க்கையின் […]

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் படம் வெளியாவதிலும் சிக்கல்.. பிரபல விநியோகிஸ்தர் வருத்தம்.!!

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்தப் பட ரிலீஸ் ஆகாதது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான ஸ்ரீதர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். […]

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்.. சரத்குமார் பேச்சு.!!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]

என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் கொடுத்த பதில்.!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும், கே வி என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்தது சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது […]

நீத்து மீது கோபப்பட்ட ரவி, முத்து மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

நீத்து மீது ரவி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் முத்து இருவரையும் உட்கார வைத்து சமாதானம் பேச பணம் எவ்வளவு கேப்பிங்க என்று கிருஷ்ணா ராம் கேட்கிறார். எங்க அம்மாவ கொன்ன மாதிரி உங்க அப்பாவ ரோட்ல வந்து நிக்க சொல்லுங்க நான் இதே மாதிரி பண்ணிட்டு பணம் கொடுத்து விடலாம் சரியா போயிடுமென்று சொல்ல முத்து என்னடா […]

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த கெஸ்ட்.. பரமு செய்த சதி வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி அருணாச்சலத்தை கட்டாயப்படுத்தி கேக் வெட்ட அழைத்து வருகிறார் வந்திருப்பவர்களும் இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கும் கேக் வெட்டுங்க அருணாச்சலம் சார் […]

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது? சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட்..!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது எப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் சாருடன் எப்போது அடுத்த […]

குஷ்பூ மகள் அவந்திகா நடிக்கும் ‘ஆரம்பம்’ பட அப்டேட்ஸ்..

குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான சினிமாவில் ‘ஆரம்பம்’ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சுஜேஷ் ஈப்பன் இயக்குகிறார். அவந்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரிதா. இந்த படத்தின் பூஜை கேரளாவில் நடந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திரைப் பயணம் துவங்கியதை சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார் அவந்திகா. ‘ஆரம்பம்’ படத்தில் இந்திரன்ஸ், விஜயராகவன், அல்தாப் சலிம், கலாபவன் ஷாஜோன், விஜி வெங்கடேஷ், ரமேஷ் கோட்டயம், ரஞ்சன் தேவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தற்போது கேரளாவில் […]

சவாலை எதிர்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது: மாளவிகா மோகனன் பேச்சு..

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது. இதற்கு பதிலளித்​துள்ள […]