துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் ஓடிடி.யில் வெளியீடு..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது ‘பைசன்’ படம். இப்படம், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது.

இதனிடையே இப்படம் நவம்பர் 21-ந்தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தின் தமிழக உரிமையை பெற்று வெளியிட்டார் ஃபைவ் ஸ்டார் செந்தில். அவருக்கு லாபமாகவே அமைந்துள்ளது.

இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர், பசுபதி, ராஜிஷா விஜயன் உள்பட பலர் நடிப்பில் வெளியான இப்படம், அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு, திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலராலும் பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

bison kaalamaadan movie to be released on ott nov 21
actor dhruv vikrambison moviedirector mari selvarajஅனுபமா பரமேஸ்வரன்துருவ் விக்ரம்