கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் தர்ஷிகா.
biggboss tamil 8 tharshika latest photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷிகா. ஆரம்பத்தில் போட்டியில் கவனம் செலுத்தி வந்த இவர் விஷால் மீது ஏற்பட்ட காதலால் போட்டியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன் தர்ஷிகா எலிமினேஷன் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வெளிய வந்து தான் எல்லாமே தெரிஞ்சுகிட்டேன் என்பதையும் சொல்லி இருந்தார்.
தற்போது அவர் கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. இது மட்டும் இல்லாமல் நீங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்றால் விஷாலை கேள்வி கேட்க வேண்டும் என்றும் பதிவு செய்து வருகின்றனர். இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.