பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss tamil 8 day20 promo 2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக வேறுபட்டு நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நிறைய கலவரங்களும் சண்டைகளும் ஆக்ரோஷமும் நிறைந்திருந்தது என்றே சொல்லலாம். அது குறித்து விஜய் சேதுபதி இன்றைய முதல் ப்ரோமோவில் பேசியுள்ளார்.
விளையாட்டு ஒன்னு தான் அதுல கட்டம் கட்றாங்களா? ஆக்ரோஷத்தை காட்றாங்களா? சுவாரசியத்தை கூட்டுறாங்களா? விளையாட்டு வச்சு தான் அவங்களோட யுத்தியை கண்டுபிடிக்க முடியும். அப்போ கவனிக்க வேண்டியது விளையாட்டு இல்ல அவங்களோட புத்தியை கவனிச்சுடலாமா? என்று சொல்கிறார். அப்போ இன்னைக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.