பாக்யாவிற்கு உதவும் பெருமாள், கவுன்சிலர் சிக்குவாரா?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம்.

baakiyalakshimi serial today episode update 27-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர் மினிஸ்டர் வீட்டுக்குள் அழைத்து நிற்க வைக்கிறார் கொஞ்ச நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு மினிஸ்டருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக மாலை மரியாதை செய்கின்றனர். கொஞ்ச நேரத்தில் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் வந்து ருசி பார்க்கிறார் ஆனால் எதுவுமே நன்றாக இல்லாமல் இருக்கிறது.

என்னையா இப்படி சமையல் சொதப்பி வச்சிருக்க என்ற திட்ட சரி பண்ணற என்று சமையல்காரர் சொன்ன உடனே இந்த சமையல்காரர்களை ஏற்பாடு செய்த நபர் யார் என்று கேட்க அதே பாக்யாவிற்கு உதவி செய்கிறேன் என சொன்னவர் தான் என தெரிய வருகிறது. அவர் வந்து உணவுகளை பார்த்து டேஸ்ட் பண்ணிவிட்டு என்னை இவ்வளவு கேவலமா பண்ணி வெச்சிருக்க இதுக்கு மேல நீங்க எதுவும் செய்யவே வேணாம் வெளிய போ என்று துரத்தி விடுகின்றனர் பிறகு அனைவரும் இப்ப என்ன பண்றது மினிஸ்டர் வேற ஹோட்டல்ல சாப்பிட மாட்டார் இன்னும் ஒன்ற மணி நேரத்துல சாப்பாடு ரெடி ஆகலைன்னா கோபப்படுவாரு என்று பதற்றத்தில் இருக்க இதையெல்லாம் கவனித்து பாக்யா வந்து அவரிடம் பேசுகிறார்.

நா வேணா சமைச்சு தரேன் என்று சொல்ல,நீங்க சின்னதா ஒரு ஹோட்டல் வச்சிருக்கீங்க இட்லி தோசை செய்வீங்க 150 பேருக்கு உங்களால் செய்ய முடியுமா என்று கேட்க நான் இதுக்கு முன்னாடி ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் என்று ரெண்டு ரெஸ்டாரன்ட் வச்சிருந்தேன் என்று சொல்ல உடனே இன்னொருவர் நான் அந்த ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு இருக்கேன்னு சொல்லுகிறார் உடனே பாக்யா போன் எடுத்து 5000 பேருக்கு சமைத்து இருக்கும் வீடியோவை காட்டுகிறார் பிறகு அவர் நீங்க சமைங்க சமைச்சது நல்லா இருந்தது அவரே பாராட்டி பேசும்போது உங்க பிரச்சனையை சொன்னீங்கன்னா ஈஸியா முடிஞ்சிடும் என்று முடிவெடுக்கின்றனர். உடனே பாக்யா சமையல் செய்யும் இடத்தில் நின்று யோசிக்க செல்வியிடம் பிரியாணி ஓகேவா என்று கேட்க இப்ப நம்ம எதுக்கு வந்துட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று கேட்கிறார் இல்ல செல்வி இது மூலமா செழியனுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் நான் நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

அவங்களுக்கு நம்ம உதவி பண்ணுவோம், அவங்க பதிலுக்கு நம்மளுக்கு பண்ண மாட்டாங்களா என்பதை மனதில் நினைத்து விட்டு வேலையை ஆரம்பிக்க பெருமாள் அண்ணன் அனுப்பியதாக ஒரு நாலைந்து பெண்மணி வருகின்றனர் உடனே அவர்களை இந்த பாத்திரத்தில் கழுவிட்டு வாங்க என்று சொல்லி வேலையை ஆரம்பிக்கிறார். என்னென்ன செய்யலாம் என பிளான் பண்ணி பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து வேலை செய்து கொண்டிருக்க உடனே பிஏ வந்து இன்னும் 30 பேருக்கு எக்ஸ்ட்ரா வேண்டும் என்று சொல்லுகிறார் இன்னும் கொஞ்ச நேரத்தில் பன்னீர் கிரேவி வேண்டும் என்று சொல்ல எல்லாருக்கும் எல்லாம் பண்ண முடியாது என்று சொல்ல மினிஸ்டர் ஃபேமிலிக்கு வரைக்கும் ஆவது பண்ணுங்க என்று சொல்ல பாக்கியா செல்வியை அனுப்பி பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார்.

சமையல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து கவுன்சிலர் வந்து வம்பு இழுக்க செல்வி இடம் பச்சடி ரெடி பண்ணுமாறு கண்ணை காட்டி அனுப்பி வைக்கிறார் பிறகு கவுன்சிலர் என்ன பேசுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? பாக்யாவின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 27-05-25
27-05-25baakiyalakshimibaakiyalakshimi serial today episode update 27-05-25episodeserialtodayupdateகவுன்சிலர்பாக்கியலட்சுமிபாக்யாவிஜய் டிவி