இனியாவின் பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினர் கிப்ட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்க ஈஸ்வரி இந்த நேரத்துல வீட்ல இருக்க மாட்டியே என்ன விஷயம் பாக்கியா என்று கேட்க நாளைக்கு இனிய பர்த்டேல அத்த அதனால ஷாப்பிங் பண்ண போக போறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல இனியா வந்துருவா என்று சொல்ல உனக்கு இனியாவோட பிறந்தநாள் கூட ஞாபகம் இருக்கா நீ மறந்துவிடுவேன் என்று நினைத்தேன் என்று சொல்ல எப்படி அத்தை என்னால மறக்க முடியும் என்று பேச ஈஸ்வரி ஹாலில் வந்து உட்காருகிறார் செழியன் என்ன பாட்டி கோவெல்லாம் போயிடுச்சா என்று கேட்க என்ன கோபம் என்று கேட்கிறார் நீங்க எதுக்கு நேத்து டென்ஷனா இருந்தீங்கன்னு எனக்கு தெரியும் அப்பா எல்லாமே சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பேன் என்று சொல்ல அப்படியா உங்க ஆசை பையன் வந்துட்டாரு நீங்களே பேசுங்க என்று சொல்ல கோபி வந்தவுடன் ஈஸ்வரி எழுந்து போக கோபி என்ன மன்னிச்சிடுங்க மாமா நான் அப்படி பேசினது தப்புதான் இனிமே அப்படி பேச மாட்டேன் நேத்து நீங்க வந்து நான் கூப்பிட்டபோது கதவை திறக்காமல் நைட் வீட்டுக்கு போய் தூக்கமே வரல நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி ஆயிடுச்சு என்று சொன்னவுடன் ஈஸ்வரி பதறிப்போய் என்னாச்சு கூப்பிட்டு எனக்கு போன் பண்ணி இருக்கலாம் இல்ல என்று கேட்கிறார். இல்லம்மா வலிக்கிற மாதிரி தான் இருந்தது என்று சொல்ல இனிமே நான் உன்கிட்ட பேசாம இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட கொஞ்ச நேரத்தில் இனியாவும் வந்து விடுகிறார்.
பிறகு அவரை வரவேற்று அனைவரும் பேச அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுகின்றனர் ஈஸ்வரி இனியாவுக்கு நகை வாங்கி கொடு என்று பாக்யாவிடம் பணத்தை கொடுக்க கோபி நானும் ஒரு கிப்ட் வச்சிருக்கேன் என்று சொல்ல செழியனும் எனக்கும் ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லுகிறார் பிறகு இவர்கள் ஷாப்பிங் கிளம்பி போகின்றனர்.
கோபி ஈஸ்வரி இடம் இனியாவுக்காக வைர மோதிரம் வாங்கி இருப்பதாக காட்ட இனிய பாக்யா வந்தவுடன் கோபி அதை மறைத்து விடுகிறார் ஆனால் ஈஸ்வரி இனியா உனக்காக உங்க அப்பா வைர மூத்திரம் வாங்கி வச்சிருக்கான் உனக்கு சர்ப்ரைஸ் பண்ண போறானா என்று சொல்ல கோபி முழிக்கிறார். உடனே பாக்யா மற்றும் இனியா சிரிக்க நான் ஏதாவது சர்ப்ரைஸ் சொல்லிட்டீங்களே என்று கோபியிடம் மோதிரத்தை காட்டச் சொல்ல அவரும் காட்டுகிறார் சூப்பரா இருக்கு டாடி என்று சொல்ல பிறகு வாங்கிட்டு வந்தால் டிரஸ் மற்றும் நகையை காட்டுகின்றனர் உடனே செழியன் வந்து அவருடைய கிப்டை கொடுக்க போன் இருப்பதை பார்த்து இனியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். சரி இனியா வீட்டுக்கு கிளம்பு டைம் ஆயிடுச்சு நாளைக்கு மாப்பிள்ளையோட கோயிலுக்கு போயிட்டு சாயந்திரம் முடிஞ்சா வீட்டுக்கு வா என்று சொல்ல நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் பாட்டி என்று சொல்லுகிறார் தொரத்துறாங்கன்னு நினைக்காதீங்க ரொம்ப நேரமா இங்க இருக்க முடியல என்று சொல்ல எனக்கு என் பாட்டி கல்யாணம் பண்ணி வச்சீங்க என்று கேட்கிறார் உடனே அனைவரின் முகம் மாற அதுக்கு இல்ல நான் இந்த பர்த்டேவோ இங்க எல்லாரும் கூடவும் சந்தோஷமா கொண்டாடி இருப்பேன்ல என்று சொல்லுகிறார். சரி பாட்டி நான் கிளம்புறேன் என்று இருவரும் கிளம்புகின்றனர்.
பாக்யா ரெஸ்டாரன்ட் வேலை பார்த்துக் கொண்டிருக்க கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்காருகிறார். என்ன சார் வேணும் என்று கேட்க எதுவா இருந்தாலும் குடுங்க பரவாயில்லை என்று சொல்லுகிறார் இவரின் மாற்றமும் பேச்சும் பார்த்து செல்வி இன்னிக்கு மழை வரப்போகுதா என்னன்னு தெரியல குடை வேற எடுத்துட்டு வரல என்று சொல்லுகிறார். உடனே இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க பாக்கியா பரிமாற வர நீங்க போங்க மேடம் நாங்க பாத்துக்குறோம் என்று சொல்லி அனுப்பி விடுகிறார் மற்ற ஒருவர் காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் வரலையா என்று சத்தம் போட உடனே கவுன்சிலர் அவனை அதட்டி நான் யார் தெரியுமா இந்த ஏரியாவோட கவுன்சிலர் இது என்னோட சிஸ்டர் கடை வந்த மாசம் போன மாசம் இருக்கணும் ரெண்டு லேடிஸ் கடையை நடத்தி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க கொஞ்சம் முன்ன பின்ன தான் வரும் சாப்பாடு இவ்ளோ டேஸ்டா பண்ணி குடுக்குறாங்கல்ல வந்தமா சாப்டமான போய்க்கிட்டே இருக்கணும் ஏதாவது பிரச்சனை பண்ணீங்கன்னா அவ்வளவுதான் என்று மிரட்ட பாக்யா வியந்து பார்க்கிறார் பிறகு 3 தோசை பார்சல் மேடம் என்னோட பையனுக்கும் என் பொண்டாட்டிக்கும் என்று சொல்லி வாங்கிக்கொண்டு பில் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.
கோபி இனியாவை அழைத்துக் கொண்டு காரில் வர சோகமாக இருக்கும் இனியாவை பார்த்து கோபி என்ன கேட்கிறார்?அதற்கு இனியாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.