சுதாகர் போட்ட நாடகத்திற்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.
baakiyalakshimi serial today episode update 01-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட்களை காலி பண்ணி விட்டு நிற்க அந்த நேரம் பார்த்து ஓனர் வந்து காலி பண்ணியாச்சா என்று கேட்கிறார் செல்வி பண்ணியாச்சு என்று சொல்ல பாக்யா ஒருத்தர் கூட சேர்ந்துக்கிட்டு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல ஆனா நீங்க சந்தர்ப்ப சூழ்நிலையை காரணமா சொல்லுவீங்க என்று சொல்ல அதற்கு அந்த ஓனர் பேலன்ஸ் எல்லாம் போக உங்களுடைய பணம் 85 ஆயிரம் ரூபாய் என்று கையில் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். உடனே பாக்யா ரெஸ்டாரன்ட் நினைத்து கண்கலங்க வேலை செய்பவர்கள் உள்ளே வந்து பொருட்களை எல்லாம் ஏத்தியாச்சு கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே பாக்யா ரெஸ்டாரன்ட் திறக்கும் போது நடந்த விஷயங்களை நினைத்து கண்கலங்கி அழுகிறார்.. பிறகு செல்வியும் பாக்யாவும் ராமமூர்த்தியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி பேங்குக்கு வருகின்றனர்.
அங்கே மேனேஜரிடம் ரெஸ்டாரன்ட் மீது இன்னும் எவ்வளவு கடன் இருக்கு என்று கேட்க 35 லட்சம் என்று சொல்லுகிறார் அத்துடன் ஆறு லட்சம் கோல்டு கடன் இருக்கு என்று சொல்ல பாக்கிய அங்கிருந்து எழுந்து வந்து விடுகிறார். இருவரும் பேசிக் கொண்டு வர செல்விக்கு போன் வருகிறது 6:00 மணியா இருந்தா கூட பரவால்ல வந்துறேன்னு சொல்லி போனை வைக்க ஏற்கனவே ஆகாஷ் பார்ட் டைம் வேலைக்கு போறதுக்கு விசாரிச்சா உனக்கு கிடைக்கல அதுதான் இன்னொருத்தர் கிட்ட என் வேலைக்கு சொல்லி வச்சிருந்தேன் என்று சொல்ல பாக்யா கொஞ்சம் பொறுத்துக்கோ செல்வி ஏதாவது பண்ணலாம் என்று சொல்ல நீயே 41 லட்சம் கடன் வச்சிருக்கேன் நீ என்னகா பண்ண முடியும் என்று சொல்கிறார்.
ஒரு வாரம் டைம் குடு செல்வி என்று சொல்லிவிட்டு இரண்டு ரெஸ்டாரன்ட் இருப்பதினால் வண்டில போயிட்டு வர முடியலன்னு கார் வாங்கணும்னு யோசிச்சேன் ஆனா கடவுள் அந்த அளவுக்கு யோசிக்கிறியான்னு கஷ்டத்தை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு என்று சொல்ல இனியாவோட மாமனார் பண்ணதுக்கு நீ என்ன அக்கா பண்ண முடியும் என்று சொல்லுகிறார். இனியாவுக்கும் மாமனார் தான் உனக்கு சம்மந்தி தான் ஆனா சொல்ற நேரத்துல கண்டிப்பா ஒரு நாள் நடுத்தெருவுக்கு வருவார் என்று சொல்லுகிறார்.
பாக்கியா வீட்டுக்கு வர சுதாகர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சுதாகர் ஈஸ்வரி மற்றும் கோபி, செழியனிடம் இனியா மற்றும் நிதிஷ்காக வீடு வாங்க போறதாக சொல்லி காட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்யா வர சம்பந்தி வாங்க என்று கூப்பிடுகிறார் சுதாகர் உடனே ஈஸ்வரியில் இனியாவுக்காக சம்மந்தி வீடு பார்த்திருக்கிறார் என்று சொல்லி காண்பிக்க நல்லா இருக்கு என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி நீங்க இவ்ளோ வேலையில இத வந்து நேர்ல சொல்லனும்னு இல்ல என் போன்ல கூட சொல்லி இருக்கலாம் என்று சொல்ல ஈஸ்வரிக்கு ஐஸ் வைத்து பேசுகிறார் அது மட்டும் இல்லாம நான் எதுக்காக மட்டும் வரல சம்பந்திக்கு என் மேல சந்தேகம் இருக்கு அதை கிளியர் பண்ணனும்னு தான் வந்தேன் என்று சொல்லுகிறார்.
அந்த ரெஸ்டாரன்ட் நான் வாங்கல சம்பந்தி என்று சொல்ல உடனே பாக்யா அப்போ நீங்க வாங்குனதா என்கிட்ட சொன்னிங்களே அதுக்கு பேர் என்ன என்று கேட்க அப்படி ஒரு கான்வர்சேஷன் நமக்குள்ள நடக்கவே இல்லை என்று பொய் சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் கல்யாணம் முடிந்த மறுநாள் ரெஸ்டாரண்டுக்கு வரும்போது நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் அப்படின்னு தானே சொன்னேன் என்று சொல்ல நீங்க எப்போ சொன்னீங்க என்று பாக்கியம் கேட்கிறார். சுதாகர் பொய்களை அடுக்கிக் கொண்டே போக பாக்யா கோபப்பட்டு பேசும் போதெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் அமைதியாக இருக்க சொல்லுகின்றனர் உடனே பாக்யா என்கிட்ட இனியாவுக்காக என்ன கேட்டிருந்தாலும் கொடுத்து இருப்பேன் ஆனா என்னோட ரெஸ்டாரன்ட் என்று ஆரம்பிக்க செழியன் உன் பிரச்சனையா பெரிசாக்கிக்கிட்டுதாமா போற முடிக்க பாக்க மாட்டேங்கற என்று சொல்லுகிறார். உடனே சுதாகர் இருந்த செழியன் சம்மந்தி மனசுல ஏதோ இருக்கு பேசினா சரியா போயிடும் என்று சொல்ல பாக்கியம் எனக்கு பேசறதுக்கு எதுவும் இல்ல சார் என்று சொல்லுகிறார்.
உடனே மீண்டும் சுதாகர் நான் அப்பவே பணம் தரேன் தரேன் என்று சொன்னதை திருப்பி சொல்ல பாக்கியா ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியா சரி பணம் கொடுத்துடுங்க நான் நஷ்டம் ஆவாத அளவுக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும் அந்த பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்ல சுதாகர் அதிர்ச்சியடைகிறார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்கின்றன? சுதாகர் பதில் என்ன? பாக்கியா என்ன சொல்ல போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்தே தெரிந்து கொள்வோம்.
baakiyalakshimi serial today episode update 01-05-25