கோபியிடம் உண்மையை சொன்ன இனியா, நித்திஷ் கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் உண்மையை இனியா சொல்ல, நிதிஷ் கேள்வி கேட்டுள்ளார்.


baakiyalakshimi serial today episode 06-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர் எந்த ஸ்வீட்டை சொல்லி இருப்பார்கள் என்று செல்வியும் பாக்யாவும் யோசித்துக் கொண்டிருக்க பாக்யாவிற்கு ஒரு ஐடியா கிடைக்கிறது அந்த நேரம் பார்த்து இனியா வர என்ன ஆச்சு இனியா டல்லா இருக்க ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லமா நல்லா தான் இருக்கேன் உன்னை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்லி கண்கலங்கி அழ என்ன நினைத்து எதுக்கு நீ பீல் பண்ற ரெஸ்டாரன்ட் பத்தி யோசிக்கிறியா நீ அதை பத்தி யோசிக்காத ஒரு குறிப்பிட்ட வயசானதுக்கு அப்புறம் பசங்களோட சந்தோஷம் தான் எங்களோட சந்தோஷமா மாறிடும் அதனால நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு போதும் என்று சொல்லுகிறார் சாப்பிடறியா இனியா என்று கேட்டோம் வேண்டாமா நான் சாப்பிட்டேன் என சொல்லுகிறார்.

பக்கத்துல ஒரு ஐஸ்கிரீம் கடை திறந்து இருக்காங்க ஐஸ்கிரீம் சாப்பிடுறியா என்று கேட்க இனி அதுவும் வேண்டாம் என சொல்லி விடுகிறார். நீ எதை பற்றியும் யோசிக்காத இனியா என்று சொல்ல பிறகு இனியாவை கோபி வீட்டில் விட நீங்க போங்க டாடி நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் வாசல் வரைக்கும் வந்துட்டு எப்படிமா உள்ள வராம போக முடியும் என்று கேட்க பரவால்ல டாடி நான் போகிறேன் நீங்க போங்க என்று சொல்ல அதெல்லாம் வேணாம்மா நான் உள்ள வந்து சொல்லிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே வருகிறார். கோபியிடம் அனைவரும் நன்றாக பேச சென்றவுடன் இனியாவை சாப்டியா என்று கேட்க சாப்பிட்டேன் என சொல்லுகிறார் உடனே சந்திரிகா நீ சாப்பிட்டனா இனிமே சாப்பாடு வேண்டாம் என்று சொல்லு என்று சொல்ல சரி என்றுஇனியா சொல்லிவிட்டு போக நித்திஷ் நிக்க வைத்து எங்க போயிட்டு வரேன் என்று கேட்கிறார்.

அம்மாவோட கடைக்கு தான் என்று சொல்ல யார பாக்க போன என்று கேட்கிறார் அம்மாவோட கடையில யார பாக்க போவாங்க அம்மாவ தான் பாக்க போனேன் என்று சொல்ல உங்க அம்மாவை பார்க்க போனியா உன்னுடைய எக்ஸ் பாய் பிரண்டு ஆகாச பாக்க போனியா என்று கேட்க இனியா மேலே சென்று விடுகிறார். ரூமுக்கு வந்த பிறகு நித்திஷிடம் நான் நம்மளோட ரிலேஷன்ஷிப்ல உண்மையா தான் இருக்கேன் நீங்க ஏன் இப்படி கேக்குறீங்க என்று சொல்ல பேசிட்டியா என்று சொல்லிவிட்டு நித்தீஷ் சென்று விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் இனிமையாக கோபிக்கு போன் போட்டு காலையில பேச வேண்டும் என்று சொல்ல இப்பையே சொல்லுமா ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார் இல்லடி காலைல பேசிக்கலாம் என்று சொல்லி வர வைக்கிறார் மறுநாள் காலையில் கோபி வீட்டுக்கு வந்து வீட்டுக்கு ரிலேஷன் வந்திருக்காங்க இனியவை பாக்கணும்னு சொல்றாங்க அதனாலதான் கூட்டிட்டு வர வந்தேன் கூட்டிட்டு போகலாமா என்று சொல்ல சுதாகர் உங்க பொண்ணு நீங்க கூட்டிட்டு போங்க என்று சொல்லுகிறார். உடனே வெளியில் வந்த இனியா யார் டாடி வந்திருக்கா என்று கேட்க யாரும் வரலமா நீ நேத்து தனியா பேசணும்னு சொன்ன இல்ல அதனால தான் பொய் சொல்லி கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். சரி வாங்க டாடி போகலாம் என்று இருவரும் காரில் கிளம்ப கோபி சாப்பிட்டுகிட்டே பேசலாமா என்று கேட்க இல்லடா முக்கியமான ஒரு விஷயம் பேசணும் இங்கேயே நிறுத்துங்க என்று சொல்ல கோபியும் நிறுத்துகிறார்.

பிறகு இனியா என்ன சொல்லுகிறார்?அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial today episode 06-06-25
06-06-25baakiyalakshimibaakiyalakshimi serial today episode 06-06-25episodeserialtodayஇனியாகோபிநித்திஷ்பாக்கியலட்சுமிபாக்கியலட்சுமி எபிசோட்