Browsing author

Suresh

தனுஷின் அடுத்த கட்டம் என்ன?

கோலிவுட்டும் டோலிவுட்டும் இணைபிரியா உறவு தானே.! அவ்வகையில், தெலுங்கில் முன்னணி இயக்குநர்களாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் பல்வேறு தெலுங்கு இயக்குநர்கள் தனுஷை அணுகி கதைகள் கூறிவந்தார்கள். அதில் வேணு உடுகுலா கூறிய கதை, தனுஷுக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒ.கே சொல்லி இருக்கிறார். இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க […]

மக்களோடு ஒருவனாய் படம் பார்த்தேன்: சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது சிவகார்த்திகேயன், ‘மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் கதை அவ்வளவே. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து […]

‘மதராஸி’ படம் குறித்து, இயக்குநர் ஷங்கர் விமர்சனம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’ என்பது தெரிந்ததே. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகியுள்ள இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திங்கட்கிழமை வசூலை வைத்தே இப்படம் எந்தளவுக்கு வசூல் செய்யும் என்பதை கணிக்க முடியும். இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து, ”பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய ஈர்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘மதராஸி’. கதையின் தன்மையையும் உணர்வுகளையும் அழகாக இணைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். காதல் […]

வட இந்திய வில்லனை எதிர்க்கிறேன்: ‘மதராசி’ பட ஹீரோ எஸ்கே..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து நாளை வெளியாகும் ‘மதராஸி’ பட தகவல்கள் காண்போம்.. புரமோஷன் நிகழ்வில், சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘மாஸ் கமர்சியல் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படம். அதுக்கு என்ன தேவையோ அதெல்லாம் இதுல இருக்கும். இந்தப் படம் எதை பற்றி பேசும்னா, துப்பாக்கிப் பற்றி பேசும். துப்பாக்கின்னா, ‘துப்பாக்கி’ படம் இல்லை. வட இந்தியாவுல இருந்து வர்ற வில்லன், இங்க உள்ள ஹீரோவை எப்படி எதிர்கொள்றான், அப்படிங்கறதுதான் ஐடியா. இதுல மெசேஜ் ஏதும் இல்லை. இந்த […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியீடு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை கடந்து, வசூலில் சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. 3 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக […]

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பூக்கி’ படத்தின் கதைக்களம் என்ன?

தமிழ் சினியில், இசைத்து நடிகரானவர் விஜய ஆண்டனி எனபது தெரிந்ததே. தற்போது, தான் நடித்து வரும் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவ்வகையில், தற்போது அஜய் திஷன் நடிக்கும் படத்தினை தயாரித்து, இசையமைக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்துக்கு ‘பூக்கி’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. ’பூக்கி’ படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கவுள்ளார். முழுக்க காதல் கலந்த காமெடி ஜானரில் இப்படம் உருவாகிறது. […]

‘சீயான்’ விக்ரமின் அடுத்த படம்; அப்டேட்ஸ்..

‘வீர தீர சூரன்’ படத்தை தொடர்ந்து, சீயான் விக்ரமின் அடுத்த திரைப்படம் எது என காண்போம்.. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டு தற்போது விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பல்வேறு […]

பாலியல் உறவு குறித்து ‘பேர்ட் கேர்ள்’ பட இயக்குநர் வர்ஷா வாய்ஸ்..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’ நாளை வெளியாகிறது. வர்ஷா இயக்கியுள்ளார். இப்பட டீஸருக்கு பெரும் எதிர்ப்பு உருவானது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, தற்போது வெளியாகவுள்ளது. ‘பேட் கேர்ள்’ குறித்து வர்ஷா தெரிவிக்கையில், ‘இந்தப் படம் பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 13 நாடுகளின் விழாக்களுக்கு பங்கேற்று வந்திருக்கிறேன். ’பேட் கேர்ள்’ படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக, இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு […]

இன்பன் உதயநிதிக்கு வாழ்த்துகள்: தனுஷ் பதிவு..

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ் என்பது தெரிந்ததே. அவ்வகையில், தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 1-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு முழுவதும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பன் […]

இதுதான் எனது கடைசிப்படம்: இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு..

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படம் சர்ச்சையாகி உள்ளது தெரிந்ததே. இந்நிலையில், இது தொடர்பாக வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘தனது தயாரிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இது தான்’ என தெரிவித்துள்ளார். ‘தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இயக்குநராக இருப்பது ஜாலியாக இருக்கிறது. இயக்குநர் வேலையை சரியாக செய்தால் போதும். அதுவே தயாரிப்பாளராக இருந்தால் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே என்ன பேசுகிறார்கள், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால், அனைத்துமே […]