Browsing author

Suresh

‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்தை தொடர்ந்து ‘வாயுபுத்ரா’..

ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமாக ‘வாயுபுத்ரா’ உருவாகிறது. 3டி-யில் உருவாகும் இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குகிறார். மலைகளையே நகர்த்திய ஹனுமனின் வலிமை, ராமபிரான் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி, நம்பிக்கை, தியாகம் ஆகியவை இந்தப் படத்தில் இடம் பெறுகின்றன. இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம், வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் […]

‘மதராஸி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி: ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரஸ்ய தகவல்..

ஒரு திரைப்படத்தின் கதை பட்ஜெட்டுக்கேற்ப, நடிகருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் மாற்றம் பெறுகிறது என காண்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘மதராஸி’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த படத்துக்காக வேறொரு கிளைமேக்ஸ் காட்சியை திட்டமிட்டு இருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘மதராஸி’ படத்துடைய ஒரிஜினல் கிளைமேக்ஸ் காட்சி மாலதியின் மரணத்துடன் முடிவதாக இருந்தது. மாலதி தனது வாழ்க்கையில் இருந்து மறைந்த பிறகு, ஹீரோவான ரகு மற்றவருக்கு உதவவில்லை. அதே நேரம் அவள் […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் […]

ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..

ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்டமைப்பு சார்​பில், கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தின​ராக பங்​கேற்றார். இவ்விழா​வில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்​போர்ன் நகருக்கு விமானத்​தில் சென்றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நவ்​யா​வின் உடைமைகளை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ […]

ஆபாசமாக சித்தரிப்பு: நடிகை ஐஸ்வர்யாராய் வழக்கு..

அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும், நல்வழிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அது ஆபாசமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதோ ஓர் வழக்கு.. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், ‘மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் […]

தேசிய விருது வழங்குதல் குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து..

பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுஜீவிதம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜ் தெரிவிக்கையில், ‘ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை […]

வலைத்தளங்களில் நிறைய மனநோயாளிகள்: இயக்குநர் தங்கர்பச்சான் சாடல்..

வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். விகே புரொடக் ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணன்ராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுஷ்மா சினிஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை செப்.19-ல் வெளியிடுகிறார். படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர் ஏகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தங்கர் பச்சான் பேசும்போது, ‘இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள், தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் […]

‘சூர்யா-28’ : ரசிகர்கள் வரவேற்பு..

சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. ‘அகரம்’ என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.! தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் வஸந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க, அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு […]

‘குட் பேக் அக்லி’ பாடல் விவகாரம்: ‘தல’ அஜித் அடுத்த கட்டம் என்ன?

‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ இயக்கி தெறிக்க விட்ட இயக்குநர் ஆதிக் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இப்படத்துக்கு் எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் விண்டேஜ் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இளையராஜாவின் என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்று இருந்தது. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹெச்.வினோத். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கே.வி.என் […]