Browsing author

Suresh

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

விஜய்யின் முழுநேர அரசியல் பயணம் குறித்து, பார்த்திபன் கருத்து; வைரல்..

பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து சூசகமாக பார்த்திபன் பேசினார். அவர் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன். […]

தனது ரசிகர்கள் குறித்து தனுஷ் பெருமிதமாய் பேச்சு..

தன்னுடைய ரசிகர்கள் குறித்து தனுஷ் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’ என்பது தெரிந்ததே. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ […]

தனது மகனுக்கு, ஷாருக்கான் மனைவி டேட்டிங் அட்வைஸ்..

ஷாருக்கான் மனைவி கௌரி, தன் மகனுக்கு கூறிய அறிவுரை பற்றிப் பார்ப்போம்.. ஷாருக்கான், கௌரிகான் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 27 வயதான ஆர்யன்கான் இயக்கிய வெப்தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ப்ரிமீயருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்து ஆர்யன்கானை பாராட்டினார்கள். அத்துடன், அவர் பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான லரிசா போனஸியை காதலிப்பதாக பேச்சாக உள்ளது. ஆர்யன்கான், நிகழ்ச்சிக்கு அவரை போன்றே கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்த […]

ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது, தனுஷ் நடித்த ‘குபேரா’ படம்..

‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பு பெற்ற அளவிற்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தனுஷின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் செல்கிறது. திரையுலகிலேயே மிகவும் உயரிய விருது ஆஸ்கர். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கலைஞர்கள் அனைவரின் கனவும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பது தான். இதுவரை, இந்தியாவிலிருந்து ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பலர் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கர் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் ரிலீஸ்; எப்போது தெரியுமா?

பிரதீப் நடித்துள்ள ‘டியூட் மற்றும் எல்ஐகே படங்களின் தகவல்கள் காண்போம்.. ‘டிராகன்’ படத்துக்குப் பிறகு ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு ஜோடியாகியுள்ளார். மேலும் சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ‘நல்லாரு போ’ என்ற 2-வது பாடல் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. […]

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் ஹிந்தி படம்; கதை என்ன தெரியுமா?

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு செல்லும் ஹிந்திப் படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுகிறது. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் […]

அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக […]

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி..

சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின. தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட […]

நடிகைகள் அமிஷா படேல் காத்திருப்பு; வேதிகா ஆத்திரம்..

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண அழைப்புகள் வருகிறது. என் தொழில் வாழ்க்கைக்காக […]