Browsing author

Suresh

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளை போலவே ஓடிடி தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம். சுந்தர காண்டா: வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் ஸ்ரீதேவி விஜய்குமார் மற்றும் விருத்தி வகானி ஆகியோர் நடித்துள்ள படம சுந்தரகாண்டா. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 23ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்: மார்வெல் […]

நெகட்டிவ் விமர்சகர்கள் மீது இயக்குநர் பிரேம்குமார் சாடல்..

அரவிந்த்சாமி, கார்த்தி இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார், ‘பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. இங்கு […]

அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் […]

நடிகர் பாலா மீது அவதூறு: சீமான் காட்டம்..

நடிகர் பாலாவுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ […]

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார். ஸ்வேதா மேனன், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். […]

‘மார்கோ’ பட இயக்குநருடன் அஜித் நடிக்கும் புதிய படம்..

‘தல’ அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், ‘மார்கோ’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவராலும அறியப்பட்ட ஹனீஃப் அதானி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹனீஃப்பின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதில், தனது அடுத்த படத்தினை தில் ராஜு தயாரிப்பில் உருவாக்க இருக்கிறார் என்பது உறுதியானது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் […]

இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..

பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார். […]

திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் […]

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான […]

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளனர். இதில், கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்தில் திருவனந்த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்களில் அதி​காரிகள் சோதனை நடத்​தினர். நடிகர்​கள் துல்​கர் சல்மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த […]