Browsing author

Suresh

சூர்யாவின் மகள் தியா இயக்கிய படம்: கதை என்ன தெரியுமா?

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் மகள் தியா ’லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா, ஜோதிகா மும்பையில் குடியேறினர். படப்பிடிப்பு சமயங்களில் மட்டும் சென்னை வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த சூழலில் இவர்களின் மகள் தியா தற்போது ஆவணக் குறும்படம் ஒன்றை […]

சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்த ‘கார்மேனி செல்வம்’ படத்தின் கதை..

‘கார்மேனி செல்வம்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ளது. இதை, பாத்வே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சக்ரி இயக்கியுள்ளார் இவர் ஏற்கெனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் ரவி என்ற பெயரில் இயக்கியவர். படம் பற்றி இவர் கூறும்போது, ‘நேர்மையான, […]

’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் […]

இட்லி வாங்க காசில்லையா?: விமர்சனங்களுக்கு தனுஷ் விளக்கம், வைரல்..

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தனுஷ், அருண் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மதுரையில் நடைபெற்ற நிகழ்வின்போது, இட்லி வாங்கி சாப்பிடவே கஷ்டப்பட்டதாக தனுஷ் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை இணையத்தில் பலரும் கிண்டலுக்கு உள்ளாக்கினார்கள். பலரும் வருடத்தைக் குறிப்பிட்டு இவர் […]

எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு.. நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது. ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் […]

விஜய்யின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘குஷி-2’ : தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விருப்பம்..

காதல், காமெடி, இசை, பாடல், காட்சியமைப்பு என அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் குஷி. விஜய்-ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம். இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, ‘தமிழில் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு, இந்தியிலும் […]

என்னுடையது அல்ல, நம்முடையது: அனிருத் பெருமிதம்..

தமிழ் சினிமாவில் தனித்த இசையமைப்பினால் அனிருத் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர்-2, ஜனநாயகன் படங்களில் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் […]

முரசொலியில் எழுதிய கலைஞரின் வாசகம்: இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சிப் பேச்சு..

கலைஞரின் எழுதிய வாசகம் குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கை பார்ப்போம்.. தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான இயக்குநருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் லிங்குசாமி. இந்த விருது வென்றது குறித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு சார்பில் எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முன்பு முரசொலியில் கலைஞர், கலைமாமணி […]

வன்மத்தை கக்குகிறார்கள்: இயக்குநர் பேரரசு சாடல்..

நெகட்டிவாக விமர்சனம் செய்பவர்களை இயக்குநர் பேரரசு சாடியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை […]

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என பட விழா ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். இதனிடையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ரஜினியும் தெரிவித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் ஜுன் மாதம் ‘ஜெயிலர் 2’ படத்தினை […]