Browsing author

Suresh

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி, தவெக நிர்வாகி நெகிழ்ச்சி..

ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்துள்ளார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டம்: கல்யாணி பிரியதர்ஷன் பதிவு..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை கல்யாணி […]

‘த கேரளா ஸ்டோரி-2’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை..

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ந்தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது. இதற்கிடையில், படத்தின் வெளியீட்டைத் தடை செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் […]

ரஜினிக்கு மகனாக நடிக்கிறார் பாசில் ஜோசப்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்-2’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இது உண்மையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ‘ராவடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் பாசில் ஜோசப். இந்நிலையில் அவர் […]

‘ரஜினி-173’ படம் பற்றி இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது. இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இப்படத்தை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. […]

நீண்ட வருடங்களுக்கு பிறகு, அமிதாப் பச்சனுடன் கமல் சந்திப்பு..

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதன் கதை இன்னும் முடிவடையாத காரணத்தால், 2-ம் பாகம் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். நீண்ட வருடங்கள்ளுக்கு பிறகு, கமலுடன் இணைந்து நடிக்கவிருப்பது குறித்த மகிழ்ச்சியை தனது Tumblr இணையத்தில் வெளிப்படுத்தி […]

விருது வருது: இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா..

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டு […]

விஜய்யின் பிறந்த நாளில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. ஆகவே, சுமார் இரண்டு மாதங்களாகியும் இப்பட வெளியீடு எப்போது […]

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் ‘புருஷன்’ பட கதைக்களம்..

நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது தெரிந்ததே. இச்சூழலில் உருவாகும் ‘புருஷன்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஷால், சுந்தர்.சி கூட்டணியில் உருவான ‘மதகஜ ராஜா’ பட வெற்றியை தொடர்ந்து ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியிருக்கிறார் விஷால். இதனை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய […]

தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் பிரதீப் ரங்கநாதன்..

தமிழ் சினிமாவில் லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர், நடிகராக வலம் வரும் பிரதீப் இப்போது தயாரிப்பாளராகவும் மாறவுள்ளார். தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் இருப்பதால், இவரது கால்ஷீட் தேதிகளுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தயாரிப்பாளராகவும் களமிறங்க பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்திருக்கிறார். அவருடைய கதையை, அவரது உதவி இயக்குநர் இயக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு […]