Browsing author

Suresh

ஜூனியராக இருந்தாலும் எனக்கு ஏ.எல்.விஜய்தான் குரு: இயக்குநர் பாலா பேச்சு..

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மார்ச் 6-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் பாலா பேசும்போது, ‘இயக்குநர் விஜய் தான் எனது குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும், எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்த குரு இயக்குநர் ஏ.எல்.விஜய் தான்.‌ ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் […]

வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..

வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து […]

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என சினிமா ரசிகர்களை கேட்க வைத்துவிட்டது. இந்நிலையில் KHxRK படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு மம்முட்டியை கேட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனின் கேங்ஸ்டர் நண்பராக மம்முட்டி நடிக்கிறார். கமலும், மம்முட்டியும் இதுவரை சேர்ந்து நடித்ததே […]

ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் […]

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 27-ந்தேதி, இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. `ஆண்டவன் கட்டளை’, `கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம். மணிகண்டனின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா […]

மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும். இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை […]

தடைகளை போடும் திரைத்துறையினர் யார்?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

‘தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், ‘திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றன. மதுரையில் ‘தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் தடைகள் யார் போடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‘அது யார் என்று சொல்லிவிட்டால், யூடியூப்பில் அதைப் போட்டு நிறைய பேர் பார்ப்பார்கள். அதை இன்னொருத்தரை குறை சொல்ல […]

தனுஷ் நடிப்பில் வடசென்னை-2: ஐசரி கணேஷ் அப்டேட்ஸ்..

தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ் கூறியுள்ள தகவல்கள் பார்ப்போம்.. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு […]

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு; விசாரணை..

நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகத் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் விவாகரத்து கோரி இங்​கிலாந்து பிரஜை​யான அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10-ல் இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆகஸ்ட் 25-ல் சென்னை ராஜா முத்தையா மன்​றத்​தில் நடந்​தது. எனது கணவர் தற்போது தவெக கட்சியைத் தொடங்கி அதன் தலை​வ​ராக உள்​ளார். […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து சமுத்திரக்கனி அப்டேட்ஸ்..

‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம் குறித்து அவர் தெரிவிக கையில், ‘நானும் ‘அரசன்’ படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் […]