Browsing author

Suresh

மே 16-ந்தேதி கோடைகால கொண்டாட்டம்: தக் லைஃப் படக்குழு இனிய தகவல்

ரசிகர்களுக்கு ஓர் இனிய தகவலை தக் லைஃப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் இருந்தபோது சிம்பு, ‘நான் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என கமலிடம் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், ‘நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றார். அதாவது சூசகமாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க […]

ரசிகர்களுக்காக விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்: இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை

விஜய் நடிப்பில் கொண்டாடப்பட்ட கிளாஸிக்கலான லவ் மூவி ‘சச்சின்’ இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்சாக நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவில், தளபதி விஜய் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகள் கழித்தும் இப்படம் இன்று ரீரிலீஸாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை மறு வெளியீடு […]

இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்ட கடுமையான பதிவு: சர்ச்சையாகி பரவுகிறது

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சையாகி உள்ளது. அவர், வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப், ‘நான் வாழ்வில் செய்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே பற்றியது. சாதியை எதிர்த்துப் போராடிய அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா? வெட்கப்படுகிறார்களா, […]

நடிகர் ஸ்ரீ, ஆஸ்பத்திரியில் அனுமதி: இயக்குனர் லோகேஷ் உருக்கமான வேண்டுகோள்

லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் ஸ்ரீ.யின் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். […]

மணிரத்னத்துக்கு நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன்: கமல்ஹாசன் சுவாரஸ்ய தகவல்

இன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ விழாவில் ‘மணிரத்னம், வெறும் மணிரத்னம் அல்ல’ என கமல் பேசினார். இது பற்றிய சுவாரஸ்யம் காண்போம்.. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்த்துள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர். விழாவில் கமல்ஹாசன் […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் விவகாரம்: தயாரிப்பாளர் விளக்கம்

இளையராஜாவின் பாடல்கள் குட் பேட் ‘அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன், ‘இளமை இதோ இதோ, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் […]

நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆயிற்று?: ரசிகர்கள் அதிர்ச்சி; ஆறுதல்

பகத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா பல மாதங்களாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். தற்போது அதற்கான காரணம் தெரிந்து ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா, பாசில் ஜோசப்புடன் இணைந்து நடித்த ‘சூக்ஸ்மா தர்ஷினி’ படம் பெரிய வெற்றி பெற்றது. சோஷிய் மீடியாவில் ஆக்டிவ்வா இருக்கும் நஸ்ரியா, பல மாதங்களாக இன்ஸ்டாவில் போஸ்ட் போடவில்லை. மேலும், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நஸ்ரியா தனது […]

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார் சந்தானம். அவ்வகையில், சிம்புவுடன் சந்தானம் இணைகிறாரா? என்ற தகவல் பார்ப்போம்.. சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் அறிமுகமான சந்தானம், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியானார். பின்னர், ஹுரோவாக மட்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், அவர் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வரும் மே 16-ந்தேதி ரிலீஸாகிறது. ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் கமிட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]

‘பொருநை’ படம், உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு: ஹிப் ஹாப் ஆதி தகவல்

‘பொருநை’ ஆவணப்படம் இந்தியாவில் புதிய முயற்சி என ஹிப் ஹாப் ஆதி பெருமிதமாய் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார். ‘பொருநை’ ஆவணப்படம் தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி கூறும்போது, ‘2016-ல் தொடங்கி […]