Browsing author

Suresh

லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் […]

ரஜினிகாந்த் பற்றி குஷ்பூ தெரிவித்த தகவல்கள் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி குஷ்பு தெரிவித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. ‘மெகா ஸ்டார்’ என்பதை தலைக்கு ஏறாமல் ரஜினி சார் இன்று வரை சாதாரணமாக இருக்கிறார். டிசைனர் வாட்ச், டிசைனர் ஷூ, டிசைனர் உடை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. கோட் சூட் போடணும், எனக்கென்று ஒரு ஸ்டைலிஸ்ட் இருக்கணும். ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் ஸ்டைலிஸ்ட்டா வந்து ஹேர்ஸ்டைல் பண்ணனும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். முடி இல்லையா மொட்டைத் தலையாக வருவேன். […]

‘குட் பேட் அக்லி’ பற்றி கங்கை அமரன் பேச்சுக்கு, அவரது மகன் பிரேம்ஜி ஃபீலிங்ஸ்

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் இடம் பெற்றுள்ளது தெரிந்ததே. இது பற்றிய திரை வட்டார பரபரப்பு பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா பாடல்களான, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இளையராஜாவிடம் முறையான அனுமதி வாங்காமல் அவரது பாடல்களைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் செல்வது […]

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ‘தல’ ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வகையில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் […]

சசிகுமார்-சிம்ரன் நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ளார். படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி உள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் […]

ஓடிடி.யில் வீர தீர சூரன், எம்புரான் படங்கள் வெளியீடு

விக்ரம் மற்றும் மோகன்லால் நடித்த திரைப்படங்கள் ஓடிடி.யில் வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. லென்த் ஷாட்ஸ் மூலம் பழி தீர்க்கும் படலமாக உருவான இப்படம் இரண்டாம் பாகம் தான். படத்தின் வரவேற்பை […]

நன்னாருக்கு ஒங்க வொர்க்கு: ‘ரெட்ரோ’ சந்தோஷ்க்கு, சூர்யா ஃபேன்ஸ் பாராட்டு

‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். […]

திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார். அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான […]

‘மகாபாரதம்’ கதையை படமாக்குகிறேன்: அமீர்கானின் புதிய சாதனை தொடக்கம்

‘எனது வாழ்நாள் லட்சியத்தை இந்த வருடம் தொடங்குகிறேன்’ என கூறியுள்ளார் அமீர்கான். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம். ‘மகாபாரதம்’ இதிகாச கதையினை படமாக்குவது என்பது மெகா சாதனைதான். அனைத்தும் நிறைவாக பொருந்தி அமையவேண்டும். இல்லையெனில், டிவி சீரியல்போல தோன்றி விடும். அவ்வகையில், இந்தியாவில் இதற்கான முயற்சிகளில் பிரபல இயக்குனர்கள் பலர் முயற்சித்தனர். பட்ஜெட் மற்றும் ஆர்டிஸ்ட் இன்னபிற காரணங்களால் பேச்சுவார்த்தையுடன் நின்று போனது. இந்நிலையில், அமீர்கானின் தற்போதைய மணவாழ்க்கை சர்ச்சையானது தெரிந்ததே. இச்சூழலில் திரைத்துறையில் தேர்ந்த திறமையாளரான […]

27-ந்தேதி ஆஜராக வேண்டும்: மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மகேஷ்பாபு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு. சூர்யா […]